தரிசனம் என்பது என்ன-? WHAT IS A VISION-? லேன்டெக் உயர்நிலை பள்ளி, சிகாகோ இல்லினாய்ஸ், அமெரிக்கா 56-04-08A 1. உங்களுக்கு மிகவும் நன்றி. நாம் ஜெபிப்போமா-? 2. எங்கள் பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்கு செய்திருக்கிற உம்முடைய சகல நன்மைகளுக் காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே, இன்று இந்தக் கூட்டத்திரை நோக்கி, இங்கு வைக்கப்பட்டிருக்கிற இந்த பிறந்த நாள் கேக்கைப் பார்க்கும் போது, நாங்கள் அபாத்திரராக உணருகிறோம். பிதாவே, நான் வருந்துகிறேன், பிதாவே. என்னை மன்னித்து அருளும். என்னால் பேச முடியவில்லை. ஆனால் தேவனே, எப்படியாகிலும், ஏதோ ஒரு வகையில், இந்த தெய்வீக அன்பின் வெள்ளம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே, இந்த மகத்தான காரியத்தைச் செய்திருக்கிற இந்த ஜனங்களை ஆசீர்வதித்தருளும். கட்டிடம் முழுவதுமே உம்முடைய மகிமையால் பிரவாகிக்கும் அளவுக்கு உமது ஆசீர்வாதங்கள் எங்களோடு கூட, இன்று மிகவும் அதிகமாய் இருக்க வேண்டுமென்று நான் வேண்டிக்கொள்கிறேன். கடந்து, மற்ற பக்கத்திற்குப் போய்க் கொண்டிருக்கிற செவிடாகவும், ஊமையாகவும் இருக்கிற அந்த ஜனங்களை பார்க்கிற அந்தப் பயங்கரமான நேரத்தை நினைத்தருளும். ஓ, தேவனே, ஏதோ ஒரு வகையில், இன்று எங்களுக்காக ஒரு மகத்தான விதத்தில், எதையாகிலும் செய்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 3. தேவனுடைய ஆசீர்வாதங்கள் தாமே பக்மன் அவர்கள் மேல் தங்குவதாக. என் அன்பு நண்பர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அது மிகவும் அருமையான காரியமாகும். நான் நினைக்கிறேன்... நீங்கள் அதை பொது ஜனங்களிடம் காண்பித்திருக்கிறீர்களா-? அவர்கள் காண்பித்திருக்கிறார்களா-? [ஒரு சகோதரன், "ஆம்" என்று கூறுகிறார் - ஆசிரியர்.) ஆமாம். அது அழகாயில்லையா-? [சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள்). உங்களுக்கு நன்றி கூறும்படியாக நான் இந்நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய அன்பான ஆசீர்வாதங்களுக்காக என்னால் எப்பொழுதாவது எதையாகிலும் உங்களுக்கு திருப்பி செலுத்தக் கூடியதாக உலகத்திலே எந்த வழியுமே கிடையாது. எனக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகளை நான் கவனித்தேன், பிறகு அந்த உறைகளுக்குள் இருக்கிற அந்தச் சிறு வெகுமதிகளையும் அட்டைகளையும் (cards), மற்றும் காரியங்களையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அற்புதம்-! நான் ஒரு முன்னேற்பாடு செய்து, அடுத்த வருடமும் என்னுடைய பிறந்த நாளுக்காக திரும்பி வர எனக்கு விருப்பமுள்ளது போன்று, அது என்னை உணரும்படி செய்கிறது. (சபையார் தங்கள் கரங்களைத் தட்டுகிறார்கள்). அன்பான உங்களுக்கு நன்றி. அற்புதமாயுள்ளது. நான் சுற்றிலும் பார்த்த போது, அது என்னவென்று எனக்கு தெரியாதிருந்தது. அது அழகாயிருக்கிறது என்பது நிச்சயம், உங்கள் வெகுமதிகள் எல்லாமே அவ்வாறே இருக்கிறது. 4. என்னால் ஒரு காரியத்தைச் சொல்ல முடியும். இது சரியாக.... இல்லை. நல்லது, ஒரு ஜெபத்தோடு கூட, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று கூறுவது. என்னால் ஒரு போதும்... முடியாமல் இருந்து, ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்திருக்கிற இந்த வெகுமதிகள் எல்லாவற்றிற்காகவும் என்னுடைய பாராட்டுகளைக் காண்பிக்கும்படியாக, இந்த ஜீவியத்தில் நான் அதைச் செய்யும்படி தேவன் ஒரு போதும் என்னை விடாமல் இருந்தால். ஒரு சிறு பெண்பிள்ளையும் கூட அங்கே உள்ளே ஒரு சிறிய உறையை வைத்திருந்தாள், அது அவளுடைய தசமபாகம் (tithings), ஏறக்குறைய எட்டு சென்டு காசுகள், அது தசமபாகம் தான் என்று நினைக்கிறேன். பிறந்த நாள் அன்பளிப்பாக அவள் தன்னுடைய தசமபாகத்தை எனக்கு அனுப்பினாள். அதிலிருந்து, இங்கேயிருக்கும் இந்த மகத்தான அன்பளிப்புகள் வரைக்கும், ஓ, என் அன்பு சகோதர சகோதரிகளே, தேவன் உங்களுக்கு முழு நிறைவாக திருப்பிக் கொடுப்பாராக. நான் அப்படியே... என்னைக் குறித்து நீங்கள் உண்மையாகவே இவ்வளவு அதிகமாக எண்ணம் வைத்திருப்பீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் உண்மையாகவே அவ்வாறு நினைக்கிறேன். நான் அதை பாராட்டுகிறேன். 5. இன்று, நாம் அதை நேர்மையோடு திறந்த இருதயத்தோடு பேசும்படிக்கு எடுத்துக் கொண்டோம், நான் இன்று அதை நம்புகிறேன். அப்படியே பிரசங்கம் பண்ணுவதற்குப் பதிலாக, வெறுமனே பேசும்படிக்கும், ஒருக்கால் கூட்டங்களில் உங்களுக்கு மிகவும் விளங்காத புதிராகத் தோன்றும் காரியங்களில் சிலவற்றை விவரிக்கவும் அதை எடுத்துக் கொள்வோம். ஒரு விதத்தில் மலைப்புற்று திக்குமுக்காடிப்போனேன். நான் இன்று வேறொரு பிறந்த நாளை எதிர்பார்க்கவில்லை. 6. வாசலில் வரும் போது, இங்கேயிருக்கும் என்னுடைய நல்நண்பராகிய ஆர்ட் வில்சன் அவர்களைச் சந்தித்தேன். கிறிஸ்தவ வியாபாரிகள் யாவருக்கும் அவரைத் தெரியும் என்று நினைக்கிறேன். உமது - உமது வீடு ஓரிகானில் இருக்கிறது, இல்லையா-? அல்லது.... [சகோதரன் வில்சன், "ரெனோ, நெவாடாவில்" என்று கூறுகிறார் ஆசிரியர்.) ரெனோ, நெவேடாவில். எனது வலப்பக்கத்தில் இருக்கிற சகோதரன் ஆர்ட் வில்சன் அவர்கள். 7. அடுத்து இருக்கிறவர் திரு. உட் அவர்கள். திரு. பாங்ஸ் உட் அவர்கள் என்னுடைய நண்பரும் அண்டை வீட்டாருமாய் இருக்கிறார். திரு.உட் அவர்கள் என்னோடுகூட வந்து கொண்டு இருக்கிறார். கூட்டத்தில் புத்தகங்களை விற்பனை செய்வதின் மூலமாக, ஜனங்களாகிய உங்களில் அநேகருக்கு அவரைத் தெரியும். அம்மனிதர் மிகவும் வெற்றிகரமான கட்டிட கான்டிராக்டராக இருக்கிறார். ஒரு நாள், நான் கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் ஒரு கூட்டத்தைக் கொண்டிருக்கையில்; அவர் தாமே ஒரு யேகோவா சாட்சிக்காரராக இருந்தார், அவருடைய மனைவியோ ஒரு மெதோடிஸ்டாக இருந்தார்கள். அவர்கள் அந்தக் கூட்டத்தைக் குறித்து கேள்விப்பட்டு இருந்தார்கள், எனவே அது எவ்வளவு உண்மை என்று கண்டறியும்படிக்கு, அவர்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்தார்கள். 8. அந்த இரவில், செயலற்றுப் போய், அநேக மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த ஒரு சிறு பெண்பிள்ளை அங்கேயிருந்தாள், கீழே அவளுடைய இடுப்பிலிருந்த எந்த மூட்டையும் அவளால் அசைக்கக்கூட முடியாதிருந்தது. ஓ, அவள் ஏறக்குறைய, ஏறக்குறைய பதினைந்து வயதான ஒரு வாலிப பெண்ணாயிருந்தாள், அவள் மேடைக்குக் கொண்டு வரப்படுகையில், அவள் தன்னுடைய தூக்குப் படுக்கையை விட்டு எழுந்து, அந்த இடமெங்கும் நடந்தாள். அடுத்த நாள், அவள் அப்படியே தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து, ஒரு சில நாட்களில், பள்ளிக்குத் திரும்பி விட்டாள்; அவள் இப்போதுங்கூட சுகத்தோடும் நலத்தோடும் இருக்கிறாள். கர்த்தர் அநேக காரியங்களைச் செய்திருக்கிறார். 9. இப்படியாக திரு. உட் அவர்கள்... செய்யும்படியாக ஏதோவொன்றைக் கொண்டிருந்தார். முடிக்க வேண்டிய வீடு, அல்லது, அவர் செய்து கொண்டிருந்த ஏதோவொன்று, அவர் துரிதமாக அதை முடிக்க வேண்டியிருந்தது, பிறகு டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டனில் நடந்த என்னுடைய அடுத்த கூட்டத்திற்கு வந்தார். அங்கே, கர்த்தருடைய தூதனானவர் தோன்றி, தூதனான வருடைய புகைப்படத்தை புகைப்பட கருவிகள் படம் பிடித்த போது, அந்த இரவில் அவர் அந்த அறையில் நின்று கொண்டிருந்தார். நீங்கள், இங்கிருக்கும் நீங்களே கண்டிருக்கிற அந்தப் படம் தான் அதில் இருக்கிறது. 10. அப்போது, அவருடைய பெரிய மாற்று வழிகளில் ஒன்றை அவர் உடையவராயிருந்தார். அவருக்கு முடமான ஒரு மகன் இருந்தான், அவனுடைய கால் அவனுக்குக் கீழாக இழுக்கப்பட்டிருந்தது. அப்போது திரு.உட் அவர்கள், நான் திரும்பி வந்த போது.... நான் வெளி நாடுகளுக்கு, சுவீடனுக்குப் போய், திரும்பி வந்தேன். அதன் பிறகு அவர்கள் கூடாரத்தை அமைத்தார்கள், அது தான் என்று நம்புகிறேன், கிளிவ்லாண்ட் அல்லது, ஓஹியோவிலுள்ள கிளிவ்லாண்ட். இருப்பினும், திரு.உட் அவர்கள், கூட்டத்தில் முன்னேறிச் வந்தார், இன்னுமாக இன்று உங்களில் அநேகர் செய்வது போன்று, அப்படியே நெடுகிலும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அது முடியும் மட்டுமாக, தங்கியிருக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொண்டார். அது தான் வழியாகும், அதைச் செய்வதற்கான வழி அதுவே. அவர் தம்முடைய வேலையை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மகனை மேலே கிளிவ்லாண்டுக்கு கொண்டு வந்தார். 11. ஒரு சில இரவுகளுக்குப் பிறகு, அது கூட்டமாக இருந்தது. நிச்சயமாக, எனக்கு அது நினைவில்லை; ஒலிநாடாவின் மூலம் மாத்திரமே. அவர் ஒரு கூடாரத்தின் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். பின்னால், அவரும் அவருடைய மனைவியும் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, கட்டிட கான்ட்ராக்டராகிய தன்னுடைய கணவனோடு அங்கே பின்னால் சீமாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கே ஒரு கட்டி இருக்கிறது. அவளுடைய மகன் முடமானவனாக இருக்கிறான். ஆனால், கர்த்தர் உரைக்கிறதாவது, 'சுகமடைந்தாயிற்று'' என்று கூறினார். அந்தச் சிறு பையனை மேலே அழைத்து வந்தார்கள். அதே மணி நேரத்திலிருந்து அவன் அருமையாகவும், வாலிபனாகவும், நேரான காலை உடையவனாகவும், எந்தப் பையனும் எவ்வளவு இயல்பாக இருக்க முடியுமோ அவ்வளவு இயல்பாகவும் இருந்தான். 12. திரு. உட் அவர்கள் கட்டிட கான்ட்டிராக்டராக செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, என்னோடு கூட நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார். [சபையார் தங்கள் கரங்களைத் தட்டுகிறார்கள் - ஆசிரியர்.) இப்படியாக, அவருடைய மகனும் என்னுடைய மகனும் ஒன்றாக நெருங்கிய சிநேகிதர்களாக இருக்கிறார்கள். அவன் எந்தப் பையனையும் போன்று, அவ்வளவு இயல்பாகவும் நலமாகவும் இருந்து, உடனடியாக இராணுவத்திற்குப் போகும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே, கர்த்தர் நல்லவராய் இருக்கிறார். இல்லையா-? ["ஆமென்). அவர் இரக்கம் நிறைந்தவராயிருக்கிறார். அவர் எவ்வளவு மகத்தான காரியங்களை நம் மத்தியில் செய்திருக்கிறார். 13. இப்பொழுது, இன்று, இப்பொழுது, இன்றிரவு, நான் நினைக்கிறேன்... நாம் கொஞ்சம் சீக்கிரமாகவே தொடங்கப் போகிறோம். நான் காலை எட்டு மணிக்கு கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் இருக்க வேண்டியதாய் இருக்கிறது, அதற்கு முன்னேற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது, நான் இன்றிரவில் முழு தூரமும் ஏறக்குறைய எட்டு அல்லது பத்து மணிநேரங்கள் காரோட்டிச் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு காரோட்டிச் செல்ல வேண்டும். அப்பொழுது தான், நாம் ஏறக்குறைய அந்த சந்திப்பு நேரத்தில் போகும்படியாக அங்கு போய்ச் சேருவோம். நாம் இங்கிருந்து நேராக கார் மூலமாக, லூயிவில்லுக்கு புறப்பட்டுப் போகிறோம். அப்படி ஆனால் நாம் இன்றிரவில் சற்று முன்கூட்டியே ஆராதனைகளை தொடங்க நோக்கம் கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் கொஞ்சம் முன்கூட்டியே வெளியேறுவதை பாராட்டுகிறோம். என்னால்... மேடையில் இருக்க முடியும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். 14. [சகோதரன் ஜோசப் மாட்சன் போஸ், "அட்டைகள் ஆறு மணிக்கு விநியோகிக்கப்படும்” என்று கூறுகிறார் - ஆசிரியர்.) (ஜெப அட்டைகள் ஆறு மணிக்கு கொடுக்கப்படும் என்று சகோதரன் ஜோசப் அவர்கள் கூறுகிறார்கள். நாம் அப்படியே.... 15. அந்த பெருங்கூட்ட ஜனங்கள் வெகு சீக்கிரத்தில் பில்லியிடம் வரலாம், எனவே திரு. உட் அவர்கள் ஜெப அட்டைகளை விநியோகித்துக் கொண்டிருக்கிறார், பில்லி அவரை குறுக்கிடுகிறான். நான், "திரு. உட் அவர்களே, நீங்கள் எவ்வாறு பொறுத்துக் கொள்கிறீர்கள்-?” என்று கேட்டேன். 16. அவர், ஒருவேளை-! அது அருமையானது, ஆனால், இரண்டு (ஜெப அட்டைகளே என்னிடம் இருக்க அது ஆறு பேருக்குத் தேவைப்பட்டதால் வருத்தம் அடைந்தேன்" என்றார். அது.... அவர், அந்த நோயாளிக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்-?” என்றார். நான், அப்படியே நீங்கள் செய்ததைத் தான். நல்லது, அவன்...” என்றேன். 17. கடந்த இரவில், அவன் மிகவும் சந்தோஷமாக இருந்த போது, அவன் (ஜெப அட்டைகளைக் கொடுத்திருந்த ஜனங்களைக் காணும்படியாக, மேடையின் மேல் நின்று கொண்டிருந்தான், தேவன் அவர்களைச் சுகப்படுத்தி, அவர்களைக் குணமாக்குகிறார். அவன் அதைக் குறித்து மிகவும் சந்தோஷப்பட்டான்-! 18. இப்பொழுது, இன்றிரவில், அவர்கள் ஆறு மணிக்கு விநியோகிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால் நான் 7:45 மணிக்கு மேடையில் இருக்க எதிர் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அது சரியென்று நான் நம்புகிறேன். பிறகு, அப்பொழுது தான் நம்மால் சற்று முன்கூட்டியே அனுப்பி வைக்க முடியும், ஏனென்றால் இன்றிரவு களைப்போடு கூட நீண்ட தூரம் காரோட்டிச் செல்ல வேண்டும். 19. எனவே, இந்தப் பிற்பகலில் வந்து கொண்டிருப்பதற்காக உங்களுக்கு நன்றி. இந்த காற்றோட்டமுள்ள, குளிர்ச்சியான பிற்பகலில், இன்னுமாக நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் ஒரு போதும் காணப்படும்படியாக வரவில்லை என்பதைத் தான் அது காட்டுகிறது. நீங்கள் கூட்டத்திலிருந்து, தேவனிடத்திலிருந்து என்ன நன்மையைப் பெற்றுக் கொள்ளக்கூடும் என்பதற்காகவே வருகிறீர்கள். அவர் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, முக்கியமாக, ஜனங்கள் இங்கே ஆறு மணிக்கே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல; அது வெறுமனே ஜெப அட்டைகள் தேவைப்படுகிறவர்களாகிய உங்களுக்குத் தான். 20. இப்பொழுது நாம் ஒன்றாகக் கூடி வரும் எல்லாவற்றிலும் கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. கர்த்தருக்குச் சித்தமானால், ஏதோவொரு நாளில், கர்த்தரைச் சேவிக்கும்படியாக மறுபடியும் சிகாகோவுக்கு சீக்கிரத்தில் திரும்பி வருவேன் என்று நான் - நான் நம்புகிறேன். வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாகவோ தீர்க்கதரிசியாகவோ இருந்தால், கர்த்தராகிய நான் தரிசனங்களில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி..... கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையோடு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது, அப்படியே திறந்த மனதோடே பேசுகிறேன். நான்.... செய்யப் போகிறேன். 21. ஜோசப் அவர்களுக்கு இது தெரியாது. ஆனால் அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும், நான் பேசுவதை இடையில் குறுக்கிட்டுத் தடுத்து, எதையாகிலும் கூறுவாரா என்று அவரிடம் நான் கேட்கப் போகிறேன். இந்தக் காலையில், ரேடியோவில், இதைப்போன்ற ஏதோவொரு பேட்டியை உடையவர்களாய் இருந்தோம். நீங்கள் எல்லாரும் அந்த ஒலிபரப்பைக் கேட்டீர்களா-? [சபையார், "ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.) 22. எனவே பிறகு, இன்றைக்கு, நான் ஒருக்கால் ஜனங்களைக் குறித்த இரக்க உணர்வைப் பெற்றுக் கொள்ளும்படி நினைத்தேன், எனவே உங்களால் அதை, இயற்கைக்கு மேம்பட்டதின் செயல்பாட்டைக் காண முடியும். ஒருவரோடு ஒருவர் அப்படியே திறந்த மனதோடே உரையாடுகிறேன், என்னால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அதிகமாக, இதற்கு உள்ளே உங்களைக் கொண்டு வருகிறேன். நான் ஒருபோதும்.... சொல்லும் படியாக என்னுடைய இருதயத்தில் நான் வைத்திருக்கிற இந்தக் காரியங்களில் அநேகம், என்னுடைய ஜீவியத்தில், இதற்கு முன்பு, நான் கூட்டத்தாரிடம் ஒரு போதும் கூறினது கிடையாது. எனவே அவர் தாமே நாம் எதைக் கூறுகிறோமோ அதனோடு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 23. நாம் பேச விரும்பும் முதலாவது காரியம் என்னவென்றால்: ஒரு தரிசனம் என்பது என்ன-? அது என்னவாக இருக்கும்-? சிலர், அநேக ஜனங்கள்.... நம்முடைய சகோதரன் பில்லி கிரகாம், "என்னைக் குற்றம் கண்டுபிடிப்பவர்களுக்கு பதிலளித்தல்" என்று கூறியது போன்று, நான் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. குற்றம் கண்டு பிடிக்கிற வெகு சிலர் எனக்குண்டு என்பதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். ஏறக்குறைய ஒவ்வொருவருமே.... 24. கூட்டத்தில் ஒருபோதும் இருந்திராத அவர்களில் சிலர், அவர்கள், "ஓ, நல்லது, அங்கே அதில் எதுவுமே இல்லை" என்று கூறலாம். ஆனால் அவர்கள் ஒரு முறை கூட்டத்தில், மிகவும் அருகாமையில் இருக்கும் போது, அது எப்போதுமே அதைத் தீர்த்து வைத்து விடுகிறது, இயேசு அவர்களுடைய இருதயத்தைப் பற்றிக் கொள்ளும் போது, அப்பொழுது அது -அது உண்மை என்பதை அவர்கள் காண்கிறார்கள். 25. ஒரு தரிசனம் என்பது அப்படியே.... அநேகர் என்னிடம், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் காண்பது பொருள் தானா-? அல்லது வெறுமனே மனதிலுள்ள தூண்டுதலா-? அல்லது, அது என்ன-?" என்று கேட்கிறார். இல்லை. அது சடப்பொருள் தான் (material). நான் சரியாக இப்பொழுது பார்ப்பது போல, அவ்வளவு உண்மையாக அது இருக்கிறது. 26. இப்பொழுது, எவ்வாறு அது சம்பவிக்கிறது, அது தேவனுடைய இராஜாதிபத்திய கிருபையின் மூலமாகவே செய்யப்படுகிறது. வெறுமனே ஒரு குழந்தையாக இருந்து, முதலாவது பிறந்த போதே, இந்த ஒளியானது உள்ளே வந்து, நான் பிறந்த அந்தச் சிறு படுக்கையின் மேல் தொங்கிக் கொண்டிருந்ததாக என்னுடைய தாயார் என்னிடம் கூறுகிறார்கள். அதன் பிறகு எனக்கு நினைவிருக்கக் கூடியதாக இருந்தது முதற்கொண்டு, அந்தக் காரியங்கள் எனக்கு முன்பாக சம்பவித்துவிட்டிருக்கின்றன. 27. அது அப்படியே திறந்தே இருக்கிறது. அதை உண்மையாகவே விளக்கிக் கூறக் கூடிய எந்த வழியுமே இல்லை என்பது போன்றே தோன்றுகிறது; ஆனால் என்னால் கூடுமானவரை சிறந்த முறையில் அதைக் கூற விரும்புகிறேன்: அது அப்படியே பரிசுத்த ஆவியானவருக்கு விட்டுக் கொடுப்பதாகவே உள்ளது. அது அப்படியே துவங்கி, உங்கள் முன்பாகவே இருக்கிறது. நீங்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்ற உணர்வு விழிப்புடனேயே இருந்தும், யாரோ ஒருவருடைய வாழ்க்கையில் 40 வருடங்களுக்கு முன்பாக அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது, நான் அப்படியே பார்த்துக் கொண்டு இருப்பதை மாத்திரமே நான் கூறுகிறேன். 28. அதன்பிறகு நான் ஒருவிதத்தில் சுயநினைவிற்கு வரும் போது, நான் எதையோ கூறி இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்கிறேன், ஆனால் அநேக நேரங்களில் நான் என்ன கூறினேன் என்பதே எனக்குத் தெரியாது. அதைப் பெற்றுக்கொள்ளும் வழி என்னவென்றால், அது இந்தப் பையன்கள் தான், இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அவர்கள், ஒலிநாடா ஒலிப்பதிவு செய்யும் இவர்கள், அதை எனக்காக திரும்ப ஒலிக்கச் செய்கிறார்கள் (play back). அவ்வாறு தான் நான் அதை கண்டறிகிறேன். எனவே, அது நான் அல்லவே அல்ல. 29. அப்படியானால் அது-அது ஒரு-ஒரு நோக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது, தேவனுக்காக இருக்கிற மிகப்பெரியதும் மிக உயர்ந்ததுமான முறையானது அவர் தம்முடைய ஜனங்களுக்குத் தமது செய்தியைக் கொடுப்பதும், ஜனங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும்படி செய்வதும் தான். அது சரியே. அது தான் மிக உயர்ந்த முறையாகும். சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணுதல் தான் மிக உயர்வான முறையாக இருக்கிறது. அதன் பிறகு, நீங்கள் கவனிப்பீர்களானால், வேதாகமமானது அதை அந்த விதமாக பொருத்துகிறது. முதலாவது அப்போஸ்தலர்களும், இரண்டாவதாக தீர்க்கதரிசி களும், மேலும் மற்றவைகளும், அதன் பிறகு வழிவழியாக, பிறகு ஒவ்வொரு தனி சரீரத்திலும் செயல்படுகிற ஒன்பது ஆவிக்குரிய வரங்களுக்குள் அது வருகிறது. 30. இப்பொழுது, அமெரிக்காவில் என்னுடைய ஆராதனைகள் இருக்க வேண்டியது போன்று மிக நன்றாக இல்லை. கர்த்தருக்காக என்னுடைய ஆராதனைகள் வெளிநாடுகளில் தான் அதிக வல்லமை வாய்ந்ததாக இருக்கின்றன. அவர்கள் அதற்கு பெரிய அளவில் ஒன்று திரண்டு கூட்டமாக வருகிறார்கள். இப்பொழுது, அது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது, நான் ஜனங்களாகிய உங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கவில்லை. இல்லை. நான் சிகாகோவைப் போன்ற இடத்தைச் சுற்றிலும் எல்லாவிடங்களிலுமுள்ள மொத்தமாக பொது ஜனங்களைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறேன், நாம் அவ்வாறு கூறலாம்; அல்லது -அல்லது மொத்தமாக தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில், பாருங்கள், அதைப் போன்ற ஏதோவொன்று; அல்லது, முழுமையாக மெக்சிகோ பட்டணத்தில் நல்லது, அதற்கு அமெரிக்காவில் மறுமொழி கொடுப்பதைக் காட்டிலும் 80 சதவீதம் அவர்கள் மறுமொழி கொடுப்பார்கள். 31. இப்பொழுது, என்னுடைய கருத்தின்படி, அமெரிக்கர்கள் எதற்கு பதில் தெரிவிப்பார்கள் (respond) என்றால், சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களுடைய சுகமளிக்கிற ஆராதனைகளுக்குத் தான், நல்லது. இப்பொழுது, சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் அவர்கள் வல்லமைமிக்க பேச்சாளர் ஆவார், நம்முடைய சகோதரனாகிய ஓரல் ராபர்ட்ஸ் அவர்கள் ஒரு உண்மையான பிரசங்கியாகவும், தேவனுக்குப் பயப்படுகிற ஒரு நல்ல சகோதரனாகவும் இருக்கிறார்; அவர் என்னுடைய ஆத்ம நண்பராகவும், ஒரு இனிமையான சகோதரனாகவும் இருக்கிறார். சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களிடத்தில் நான் பெரிய, ஆழமான மரியாதையை வைத்திருக்கிறேன். கர்த்தர் அவரோடு இருந்து, அவரை மிகப்பெரிய அளவில் ஆசீர்வதித்து வருகிறார், அவருடைய கூட்டங்கள் இங்கே அமெரிக்காவில் உள்ளன. அவர்.... 32. நாங்கள் இருவரும் ஒரு பட்டணத்திற்குள் போய், அவர் தம்முடைய கூட்டத்தையும், நான் என்னுடைய கூட்டத்தையும் ஏற்பாடு செய்கிறேன். ஒரு சிறு விளம்பரத்திலேயே அவருடைய கூட்டத்தார், என்னுடையதைக் காட்டிலும்) அநேக மடங்காக பனியைப்போல மூடிக் கொள்கிறார்கள், ஏனென்றால் அவருடைய ஊழியமானது இங்கே அமெரிக்காவில் பெரிய தாக்கத்தை உடையதாயிருக்கிறது, ஏனென்றால் அவர் அவ்வளவாக ஒரு ஒரு ஒரு செல்வாக்கு உள்ள பேச்சாளராக இருக்கிறார். அவர்.... அவருக்கு ஒரு - ஒரு வழி உண்டு. அவர் புத்திசாலி யாகவும், கல்விகற்றவராகவும், வேதாமகத்தை அறிந்தவராகவும் இருக்கிறார். கல்விகற்ற மக்களும் கேட்கும்படிக்கு அவரால் அவ்வளவாக ஒரு விதத்தில் அதை எடுத்துரைக்க முடியும், ஏனென்றால் அவர்கள் - அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயப்படிநிலையாக அது இருக்கிறது. 33. ஆனால் எங்களை எடுத்துக்கொள்ளுங்கள், நாங்கள் ஆப்பிரிக்காவுக்குப் போனபோது, நல்லது, அங்கே எந்த ஒப்பிடுதலுமே இல்லாதிருந்தது. பாருங்கள்-? கல்வியறிவற்ற ஜனங்களும், மற்றவர்களும், இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு இது, கல்வி கிடையாது... இங்கேயுள்ள இந்த ஜனங்களைக் போன்று அவர்கள் கல்விகற்ற மேதைகளாக இருப்பதில்லை. எனவே அப்போது.... அது ஜனங்களை ஆதாயப்படுத்தும்படியாக, கர்த்தர் கொடுத்திருக்கிற ஒரு காரியமாக இருக்கிறது. 34. இப்பொழுது, நான் அவ்வாறு கூறும்படி கருதவில்லை... அநேக கல்விகற்ற, புத்திசாலி களான, புத்திகூர்மையுடைய, மிகப்பெரியவர்களில் சிலர், இராஜாக்களும், பெரும் அதிகாரம் படைத்தவர்களும், மன்னர்களும் கூட, அவர்கள் நிச்சயமாகவே அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள். 35. ஆனால் பொதுவான மதிப்பளவில் பார்ப்போமானால், நம்முடைய அமெரிக்க சபைகள், நாம் பழமையான வெஸ்லியின் காலத்திலிருந்து, நமக்கு ஒரு எழுப்புதல் நடந்து நெடுங்காலம் ஆகி விட்டது. அந்தப் பழைய தலைமுறைகள் முற்றிலுமாக மறைந்து விட்டன. வெஸ்லி கால ஜனங்கள் வழக்கமாக வெளியே உதைத்து தள்ளப்பட்டு, "பரிசுத்த உருளையர்கள்" என்றும், குடிகாரர்கள் (jerkers)" என்று அழைக்கப்பட்டனர், ஏனென்றால் அவர்கள் தங்கள் தலையை உதறி உலுக்கிக் (jerked) கொண்டார்கள், மேலும் - மேலும் மேடைகளிலும் சுற்றிலும் எல்லாவிடங்களிலும், சபையில் இடைப்பட்ட நடைபாதைகளிலும் படுத்திருந்தார்கள். பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இருந்த போது, அவர்கள் அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றி, அவர்களுக்கு விசிறினார்கள். இப்பொழுது, அந்த நாள், நீண்ட காலத்திற்கு முன்பாகவே, முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. 36. நாமெல்லாரும் ஓ, மிகவும் வைதீகமான வழக்கத்திற்கு, ஒரு முறையான வாழ்க்கை வாழ்ந்து வந்து விட்டோம். ஆனால் அந்தக்காரணத்தினால் தான் அவர்களால் முடியவில்லை . நல்லது, ஒரு -ஒரு முற்றும் கற்று உணர்ந்து தேர்ச்சிபெற்ற வழியில் அதை பிரசங்கம் பண்ணக் கூடியவர் தான் ஒரு - ஒரு பேச்சாளர் என்று இன்றுள்ள ஜனங்களுக்குக் கற்பிக்கப்பட்டு இருக்கிறது. நல்லது, அதெல்லாம் சரிதான். அது அப்படியே அருமையானதும் பகட்டானதுமாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுகிற காலம் வரையில், அது - அதுவே பிரதான காரியமாகும், நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் காலம் வரையில். 37. இப்பொழுது, நம்முடைய சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களைக் கவனிக்கிறோம். அநேகமாக, அவருடைய ஒலிபரப்பை இன்று காலையில் கேட்டிருப்பீர்கள். நான் பத்திரிகையில் கட்டுரைகளை வாசித்து, அதை நேரடி அனுபவமாக (firsthanded) வைத்துக் கொண்டேன். அது எவ்வாறு.... ஆஸ்திரேலியாவில், அது என்னவொரு பயங்கரமான காரியமாக இருக்கிறது, அந்த கேலி செய்கிறவர்கள் அவரை, "போலியாள்" என்றும் மற்றும் எல்லாமாகவும் அழைத்து, அவரை அவ்விதமாக வெளியே துரத்திவிட்டார்கள். அநேகமாக, அங்கே.... இம்மாதிரியான ஊழியமானது சரியாக இப்பொழுதே அந்தக் காரியத்தைக் குறித்து (அவர்கள்) பேசுவதை நிறுத்தும்படி செய்திருக்கும். பாருங்கள்-? புரிகிறதா-? அது வித்தியாசமாக இருந்திருக்கும். ஆனால், இன்னுமாக, சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களோ, என்னால் தொடவும் முடியாத ஜனங்களோடு கூட கிரியை செய்யும் படியான ஒரு வழியை தேவன் அவருக்குக் கொடுத்து இருக்கிறார். அவரால் தொடக்கூடிய ஜனங்களோடு ஒருக்கால் நான் வேலை செய்யலாம். ஆனால் ஒருமித்து, தேவனுடைய இராஜ்யத்திற்காக நம்மால் கூடுமானதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் சகோதரர்களாக நாமிருக்கிறோம். பாருங்கள்-? 38. தரிசனங்கள் என்பது பிரசங்கம் பண்ணுகிற சுவிசேஷத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், எனக்கு ஒரு கல்வி இருந்து, அநேகமாக ஒரு நல்ல குரலும் மற்றவைகளும் இருந்து, சுவிசேஷத்தை அந்தவிதமாகப் பிரசங்கம் பண்ண முடிந்திருந்தால், நான் அநேகமாக அம்மாதிரியான ஒரு - ஒரு பிரசங்கியாக இருந்திருப்பேன். ஆனால், நான் கல்விகற்கச் செல்லவில்லை என்று தேவனுக்குத் தெரிந்து, வேலை செய்யும்படியாக வேறு ஏதோவொன்றை அவர் எனக்குக் கொடுக்க வேண்டியிருந்தது, நீங்கள் பாருங்கள். அவ்வாறு தான் அவர் அதைச் செய்திருக்கிறார், எனக்குத் தெரிந்த ஒரே காரியம். 39. இப்பொழுது, மேடையின் மேல் என்ன சம்பவிக்கிறது என்று நீங்கள் வியப்படையலாம். ஒரு - ஒரு - ஒரு நோயாளியோ அல்லது... நான் அதை அந்தவிதமாகக் கூறவில்லை. அது மருத்துவ பதத்தில் அதிகமாக இல்லை. நான் இதை கூறலாம், ஒரு நண்பர் எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்து, உதவியை விரும்பும் போது, இங்கு தான் அது சம்பவிக்கிறது. எனக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது, ஒரு காரியமும் கிடையாது. அந்த தெய்வீக வரத்தை செயல்படுத்துவது அந்த நோயாளி தாமே. எனக்கு அதனோடு எந்த சம்பந்தமுமே கிடையாது. நான் அப்படியே தொடர்ந்து விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன், அவர்களுடைய ஆவியும், நான் அவரிடம் விட்டுக் கொடுக்கிற என்மேல் இருக்கிற ஆவியானவரும், பரிசுத்த ஆவி.... வரையில் விட்டுக்கொடுக்கிறேன். 40. நான் அதை இவ்வாறு அழைக்கிறேன், சரியாகச் சொன்னால், நான் அதை இவ்வாறு செய்கிறேன், அப்பொழுது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இதோ இங்கே மேலே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். அப்போது, அவர் -அவர் அங்கே இருக்கிறார் என்று நான் அறியும் மட்டுமாக, நான் அப்படியே தொடர்ந்து என்னைத்தானே அவருக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். நான் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கொள்ளக்கூடும் மட்டுமாக, அந்த நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது வரையில், எனக்கு வேறு எதுவும் தெரியாது. என்னுடைய ஆவியை விட்டுக் கொடுப்பதன் மூலமாக, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய ஜீவியத்தை எனக்குக் காண்பிக்கிறார். அது சம்பவிக்கும் போது, அது அந்த நோயாளியின் விசுவாசத்தை இவ்விதமான ஒரு நிலைக்கு கட்டியெழுப்புகிறது. 41. அப்போது, அநேக நேரங்களில், நான் வேறு ஏதோவொன்றைக் கூறத் தொடங்குகிறேன், அது என்னை நிறுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறுகிறது. இப்பொழுது அதைக் கவனித்துப் பாருங்கள். அது ஒவ்வொரு முறையும், பரிபூரணமாக இருக்கிறது. அது ஒருபோதும் தவறிப் போனதில்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை நான் அவர்களிடம் கூறுகிறேன். அது அந்த விதமாகவே இருக்கும். அதைக் குறித்து வைத்து, அது அந்த விதமாக இல்லையா என்று பாருங்கள். இப்பொழுது, அது, அந்த நோயாளி அதைச் செய்து கொண்டிருக்கிறார். 42. இப்பொழுது, அது ஒரு சிறிய திறமையற்ற முறையில் (amateur form) இதைக் கொடுப்போம், அப்பொழுது நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். இவ்வாறு வைத்துக்கொள்வோம், அங்கே, அங்கே ஒரு மகத்தான பெரிய.... நாமெல்லாரும் சிறு பையன்களாகவும் சிறு பெண் பிள்ளைகளாகவும் இருப்பதாகவும், நாம்.... பின்னோக்கி சிறுபிள்ளைப் பருவத்தில் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். இதோ அங்கே ஒரு மகத்தான பெரிய வேலி இருக்கிறது. அங்கே உள்ளே ஒரு திருவிழா நடக்கிறது. நான்-நான் - நான் உங்களைக் காட்டிலும் சற்று உயரமாக இருக்கும்படி நேரிடுகிறது. ஒருக்கால் நீங்கள் என்னைக் காட்டிலும் பலசாலியாக இருக்கிறீர்கள், ஆனால் நானோ உயரமானவனாக இருக்கிறேன். புரிகிறதா-? தேவன், ஜனங்களை வித்தியாசமான வேலைகளுக்காக வித்தியாசமான விதங்களில் உண்டாக்குகிறார். நல்லது, அப்படியானால், இங்கே மேலே, நான் ஏறக்குறைய எதன் வழியாகப் பார்க்க முடிகிறதோ, அங்கே சுவரில் ஒரு துவாரம் இருக்கிறது. நல்லது, இப்பொழுது, என்னால் அதன் உச்சியைப் பிடிக்க முடிகிறது, ஏனென்றால் நான் சற்றே உயரமாக கை நீட்டி, என்னுடைய விரல்களால், மேலே உயர்த்தி, இந்த துவாரத்தினூடாகப் பார்க்க முடிகிறது. பிறகு நான் திரும்பி வந்து, என்ன கண்டேன் என்று உங்களிடம் கூறுகிறேன். இப்பொழுது அந்த கருத்து புரிகிறதா-? நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்களா-? [சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) இப்பொழுது, இப்பொழுது, ஒருக்கால் அடுத்த மனிதன் பலசாலியாக இருக்கலாம், ஆனால் அவனால் அவ்வளவு உயரமாக பார்க்க முடியாது. எனவே அவர், "சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் என்ன காண்கிறீர்கள்-?" என்று கேட்கிறார். 43. நான், "சற்று பொறுங்கள்” என்று கூறிவிட்டு, மிக அதிக உயரம் மேலே குதித்து, என்னுடைய விரல்களை மேலே முனையில் பிடித்து, என்னைத்தானே மிகவும் கஷ்டப்படுத்தி, மேலே உயர்த்தி, "நான் -நான் - நான் ஒரு யானையைக் காண்கிறேன்" என்று கூறிவிட்டு, இறங்கி விடுகிறேன். பாருங்கள்-? அது விடாமுயற்சியாக இருக்கிறது, ஏனென்றால் நான் என்னைத் தானே மேலே உயர்த்துகிறேன் (lifting up). நான் இதை ஒரு உவமானத்தைப் போன்று கூறிக் கொண்டிருக்கிறேன், அப்பொழுது நீங்கள் நிச்சயம் புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது, நான் திரும்பவும் கீழே இறங்கும்போது, நீர் என்ன கண்டீர்-?” என்று கேட்க). ஒரு யானை" என்று கூறுகிறேன். பாருங்கள்-? சரி. 44. இப்பொழுது, அது மேடையின் மேல் அந்த நபர் நின்று கொண்டிருப்பது போன்று இருக்கிறது, இந்த தெய்வீக வரத்தைப் பயன்படுத்தி, அது ஒரு கடுமுயற்சி செய்வதாக இருக்கிறது, ஏனென்றால் அந்த நபர் தாமே அந்த வரத்தை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவர்கள் அதைக் குறித்து உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தாமே அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 45. இப்பொழுது, சென்ற இரவில், அங்கே மேடையின் மேல் ஒரு மனிதன் நின்று கொண்டு இருந்ததாகக் கூறினேன். சகோதரன் ஜோசப் அவர்கள் என்னை சந்தித்த பிறகு, அந்த மனிதன்... என்று என்னிடம் கூறினார். நான்... முதலில், அவர் மேலே வந்த போது, அவர் செவிடாகவும் ஊமையாகவும் தான் இருந்ததாக நினைத்தேன். நான், எப்படியிருக்கிறீர்கள், ஐயா-?" என்று கேட்டேன். அந்த முறையிலுள்ள ஏதோவொன்றைக் கேட்டேன். அதை நான் சரியாக திரும்ப மேற்கோள் காட்டாமல் இருக்கலாம். அவர்கள் என்னிடம் கூறியதையே நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நான் இன்னும் அந்த ஒலிநாடாவை ஒருக்காலும் கேட்டிருக்கவே இல்லை. அந்த மனிதர் அப்படியே அங்கே நின்று கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. நான், 'நல்லது, அவர் ஒருக்கால் செவிடாகவும் ஊமையாகவும் இருக்கலாம்" என்று சொன்னேன். 46. இப்பொழுது இராஜாதிபத்தியக் கிருபையைப் பாருங்கள். புரிகிறதா-? அது மேடையின் மேலிருந்த அந்த வெறி பிடித்தவனைப் போன்றிருக்கிறது. அது ஆப்பிரிக்காவிலுள்ள மந்திரவாதி, அங்கே தன்னுடைய விரல்களில் எலும்புகளோடு நின்று உங்களுக்கு சவாலிடுவது போன்று இருக்கிறது, நீங்கள் பாருங்கள். அப்போது, கிருபையானது பற்றிப் பிடித்துக் கொள்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கவலைப்பட வேண்டாம். அதைக் குறித்து அங்கே ஒரு கவலையும் இல்லை. கிருபையானது பற்றிப் பிடித்துக் கொள்கிறது. உங்களால் பற்றிக் கொண்டிருக்க முடியாத இடத்தில் தேவன் பிடித்துக் கொள்கிறார். அப்போது அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருந்த போது... அதற்கு முன்பு, நான் -நான், "நல்லது, ஒருவேளை இவன் செவிடாகவும் ஊமையாகவும் இருக்கலாம்” என்றேன். திடீரென்று, எனக்கு முன்பாக ஒரு தரிசனம் தோன்றியது. அப்போது..... 47. [ஒரு கைக்கடிகாரம் அலாரம் ஒலியை எழுப்புகிறது - ஆசிரியர்.) இப்பொழுது, அந்த வாட்ச் அலாரம் ஒலியை எழுப்பினதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். அது.... வேண்டியிருந்தது. இங்கே வந்து, துவங்க வேண்டியிருந்தது. எனவே, நீங்கள் இதைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட்ட நேரத்தில் மணியடிக்கிற, அங்கேயிருக்கும் ஒரு கைக்கடிகாரத்தை என்னிடம் தாருங்கள். எனவே, நிறுத்த வேண்டிய நேரம் இன்னும் அதுவல்ல என்று நம்புகிறேன். எனவே... நான் இதைக் கேட்பேன்; கவலைப்பட வேண்டாம். 48. இப்படியாக, அப்போது, அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருக்கிறார். நான் துரிதப்படுகிறேன், அநேகமாக, அந்த தரிசனத்தில் பின்லாந்து அல்லது ஏதோவொன்றைக் கண்டேன். எனக்கு நினைவில்லை. ஆனால் இப்பொழுது, அது என்னவாக இருந்தாலும், அவன் ஒரு பின்லாந்து தேசத்தான் என்று அவரிடம் கூறினதாக அவர்கள் சொன்னார்கள். அவர் எங்களை வேறு ஏதோவொன்று என்று ஏமாற்றிக் கொண்டிருந்தார், ஒருக்கால் அவன் ஒரு பின்லாந்து தேசத்தவனாக இருக்கலாம். நல்லது, இங்கே இருக்கும் ஜோசப் அவர்கள், அவரால்..... முடிந்தது என்று கூறினார். அது அவருக்கு கவனிக்க வேண்டிய தலைசிறந்த காரியமாக இருந்தது, அந்த மனிதன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று அதற்கு எப்படித் தெரிந்து இருந்தது. தேவன் கிருபையினாலே அதைக் காண்பித்தார். (சகோதரன் ஜோசப் மாட்சன் - போஸ் அவர்கள் சுகமடைந்த அந்த பின்லாந்து தேசத்து சகோதரனைக் குறித்து சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறார் - ஆசிரியர்.) 49. அநேகமாக, அந்த மனிதன் இன்று இக்கட்டிடத்தில் இருந்து, யாரோ ஒருவர் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால், அது ஒரு விதத்தில்..... அவர்களால் பின்லாந்து தேசத்து பாஷையைப் பேச முடிந்தால்,.. பாருங்கள். அது சரி என்றால், நீங்கள் உங்கள் கரத்தை மேலே உயர்த்துவீர்களா-? அம்மனிதன் இன்று இந்தக் கட்டிடத்திற்குள் இருந்தால், நாம் பேசிக் கொண்டிருக்கிற, கடந்த இரவு இங்கேயிருந்த அந்த பின்லாந்து தேச பாஷையைப் பேசுகிற மனிதன், மேடையின் மேல் இருந்தவன். நான் அப்படியே விரும்பினேன்- விரும்பினேன்.... 50. [சுகமடைந்த, பின்லாந்து தேச பாஷை பேசும் அந்த சகோதரனைக் குறித்து சகோதரன் ஜோசப் மாட்சன் போஸ் அவர்கள் சகோதரன் பிரன்ஹாமோடு தொடர்ந்து பேசுகிறார் - ஆசிரியர்.) நல்லது, அவர் ஒருக்கால் தம்முடைய வீட்டிற்குத் திரும்பிப் போய் விட்டார் என்று ஊகிக்கிறேன். 51. இப்பொழுது, இப்பொழுது, இயேசு இங்கே பூமியின் மேல் இருந்த போது..... அவர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட வாய் வைத்துப் பேசும் பாகமாக இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? [சபையார், "ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.) அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரனாக இருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார், அது அளவேயில்லாமல் இருந்தது. வேத மாணாக்கர்களே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? ["ஆமென்."] அவர் இம்மானுவேலாக இருந்தார். நம்மில் யாருமே அந்த நிலைக்கு எப்போதுமே வரமாட்டோம். இல்லை. இல்லை. அவர் கன்னிப் பிறப்பில் பிறந்த தேவனுடைய பரிசுத்த குமாரனாக இருந்தார், நாம் ஒரு போதும் அவ்வாறு இருக்க மாட்டோம். நாம் ஒரு போதும் அதைப் போன்ற அந்தக் காரியங்களைச் செய்ய முடியாது, ஏனென்றால் அவர் அதுவாகவே இருந்தார். 52. ஆனால் இப்பொழுது, அவர் செய்த காரியங்களை நாமும் செய்வோம் என்பதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், ஏனென்றால் நாம் அவர் மூலமாக, தேவனுடைய சுவிகார புத்திரர்களாக ஆனோம். அது சரிதானா-? [சபையார், ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) இப்பொழுது, அது.... அல்ல. அது நம் ஒவ்வொருவருக்காகவுமே இருக்கிறது. ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய குமாரர் மற்றும் குமாரத்திகளாக ஆகிறார்கள். அது சரிதானா-? ["ஆமென்.”] 53. இப்பொழுது, பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட போது, அது அப்படியே அந்தத் துவாரத்தின் வழியாக உற்றுப் பார்ப்பதாக இருந்தது. பாருங்கள்-? அவர் தம்மிடமிருந்து வல்லமை புறப்பட்டதை உணர்ந்தார். அவர் அடைந்தார் - அவர் பலவீனம் அடைந்தார், ஆனால் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாதிருந்தது. ஒரு - ஒரு விசுவாசத்தினாலே, யாரோ ஒருவர் அவரை தொட்டிருந்தார்கள். அது யார் என்று அவர் கேட்டார், எல்லாருமே அதை மறுத்தார்கள். எனவே அப்போது, அவர் அதைச் செய்த பிறகு, என்ன சம்பவித்தது, ஏன், அவர் கண்டு பிடிக்கும் வரையில், சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்தார். இப்பொழுது, அங்கே.... 54. அவருக்கு அவளை எப்படித் தெரிந்தது-? நான் உங்களிடம் கொண்டுவர விரும்புகிற கேள்வி அது தான். அவர் எவ்வாறு அவளை அறிந்து கொண்டார். இப்பொழுது.... ஒரு சகோதரனாக, இதை விளக்கிக்கூறும்படி நான் முயற்சி செய்து பார்க்கட்டும், அவர் எவ்வாறு அவளை அறிந்து கொண்டார். 55. ஏனென்றால், யாராவது ஒருவர் அதைச் செய்த போது, இங்கே கூட்டங்களிலிருந்து, பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதிலிருந்து என்னால் கூற முடியும். யாராவது ஒருவர் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கும் போது, அது அந்த விதமாக, உங்களை இழுக்கிற ஏதோவொன்றாக இருப்பதைப் போன்று தோன்றுகிறது, பாருங்கள், நீங்கள் அப்போது அந்த நபரிடம் போகிறீர்கள். பிறகு, அப்படியே அந்த நபருக்கு மேலாக, நீங்கள் அவர்களையும், அவர்களுக்கு என்ன சம்பவித்து இருக்கிறது என்பதையும், அவர்களுக்கு என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்பதையும் காண்கிறீர்கள். அப்போது நீங்கள் நோக்கி, அது அதே நபர் தான் என்று காண்கிறீர்கள், அது உங்களுக்கும் அந்த நபருக்கும் இடையில் கிரியை செய்து கொண்டிருக்கிற ஒரு - ஒரு பாதை (avenue) மரங்களடர்ந்த சாலை, அல்லது ஒரு வாய்க்கால் போன்று இருக்கிறது. 56. அவ்வாறு தான் நான் நினைக்கிறேன். அவர் ஒரு போதும் அதை விவரிப்பதில்லை. அவருக்கு அது தெரியும் என்று அவ்வாறு தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அதைப் போன்ற விதத்தில் தான் கிரியை செய்கிறார், நான் அவ்விதம்தான் அதைப் புரிந்து கொண்டேன். 57. இவ்வாறு வைத்துக்கொள்வோம், நீங்கள் சில சமயங்களில், பச்சை நிற தொப்பியை வைத்துக் கொண்டு, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டி," அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றை, "நீங்கள் இன்ன - இன்னவற்றால் அவதிப்பட்டு வருகிறீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வருகிறீர்கள்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்-? அப்பொழுது நீங்கள் சரியாக தரிசனத்தில் இருந்து, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அவள் துரிதமாக பூரண சுகம் பெறுவதை ஒருக்கால் நீங்கள் காணலாம், ஒளியானது அவளைச் சுற்றிலும் இருக்கிறது, மற்றும் எல்லாமும். ஏன், அப்போது நீங்கள், ஏன், அவள் சுகமடைந்து விட்டாள். அது கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறுகிறீர்கள். புரிகிறதா-? அந்த தரிசனத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிற கர்த்தர், அவருக்குள் தான் உங்கள் விசுவாசம் இருக்கிறது, அவர் உங்களிடம் கூறும்படிக்கு நீங்கள் விரும்புவதை உங்களிடம் சொல்லும் படியாக வாய் வைத்துப் பேசும் ஒரு பாகமாகவே (mouthpiece) அவர் என்னை உபயோகிக்கிறார். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா-? இப்பொழுது, ஆனால் அது மற்ற... ஆக இருக்கும் போது. இப்பொழுது, அது தேவனுடைய அனுமதிக்கும் வழி தான் (permissive way) கிரியை செய்து கொண்டிருக்கிறது. 58. நான் இதை பயபக்தியுடன் கூறுகிறேன். வேளை சமீபமாயிருக்கிறது. நான்... கர்த்தர் எனக்குக் காண்பித்திருக்கிற தரிசனம் என்னவென்பதை நான் உங்களிடம் கூறினபிறகு, இறுதியாக இது பின்னால் சென்று விடும், அதற்கும் அப்பால் தூரமான ஏதோவொன்றிற்கு இடத்தைக் கொடுத்து விடும். இந்தப் பிற்பகலில், அதனிடம் தான் நான் வர விரும்புகிறேன். 59. இப்பொழுது, அந்த நபர் அதைச் செய்து கொண்டிருக்கிறார், அவர்கள் அதை விசுவாசிப்பார்களானால், அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, சுகமடைவார்கள். இப்பொழுது, அவர்கள் சுகமடைந்து விட்டார்கள் என்பதல்ல; ஆனால் அவர்களுடைய விசுவாசமானது தேவனைத் தொட்டு, ஏற்கனவே 1900 வருடங்களுக்கு முன்பாகவே, அவர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்கிறது. பாருங்கள்-? அது அவர்கள் தங்களுடைய சுகத்திற்கு செய்ய வேண்டிய ஏதோவொன்றைக் கொண்டிருப்பதல்ல. அது வெறுமனே பேசும்படிக்குள்ள வாய் வைத்துப் பேசும் ஒரு பாகமாகவே (mouthpiece) இருந்தது. 60. வேதாகமத்தில் எந்த இடத்தில் அது எப்படி செய்யப்பட்டது-? நாம்... இல்லை. நான் என்னைத் தானே ஒரு தீர்க்கதரிசிக்கு ஒப்பிடவில்லை. இல்லை, ஐயா. இல்லை. நான் வெறுமனே கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு ஏழை பாவியாக இருக்கிறேன். ஆனால் கர்த்தர் தீர்க்கதரிசிகளுக்குக் கொடுத்து, அவர்களைத் தீர்க்கதரிசிகளாக ஆக்கின அந்த வரமானது, அவர்கள் தேவனுடைய வாய் வைத்துப் பேசும் ஒரு பாகமாகவே (mouthpiece) இருந்தார்கள். அவர்களிடம் தேவனுடைய வார்த்தை இருந்தது. எந்த தீர்க்கதரிசியுமே தன்னுடைய சொந்த இஷ்டப்படி எதையும் எப்பொழுதும் செய்தது கிடையாது. முதலில், தேவன் அவனிடம் பேசின பிறகு, அவன் அதைச் செய்தான். அது சரியே. 61. அவ்விதமாகத் தான் தேவனுடைய குமாரன், தீர்க்கதரிசியின் தேவனாயிருந்த அவர் வந்த போது. அவர், செய்யும்படிக்கு பிதாவானவர் என்னிடம் காண்பிக்கிறபடி மாத்திரமே நான் செய்கிறேன்" என்றார். அது சரியே. அது மாம்சத்தின் வழியாக வெளிப்படுத்தும்படிக்கு, தெய்வீக வல்லமைகளின் மூலமாக மாத்திரமே வர வேண்டியிருக்கிறது. கிறிஸ்துவானவர் பூமியின் மேல் தேவனுடைய வாய்வைத்துப் பேசும் ஒரு பாகமாக (mouthpiece) இருந்தார். எல்லாருக்கும் அது புரிந்து விட்டதா-? [சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) 62. இப்பொழுது, உதாரணமாக, சில சமயங்களில், நான் வீட்டில் இருப்பேன். ஜீனும், லியோவும் மற்றும் சென்ற இரவில் நான் பேசிக் கொண்டிருந்தேனோ அவர்களும், அவர்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், சகோதரன் பீலர் மற்றும் அவர்களில் மற்ற அநேகரும், என்னை அறிந்துள்ளவர்களும். வீட்டில், நான் வீட்டினூடாக, எதைக் குறித்தும் சிந்திக்காமல், நடந்து கொண்டிருப்பேன். ஒருக்கால் அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருப்பேன், அப்போது அங்கே ஒரு தரிசனம் வரும். ஒருக்கால் நீண்ட நேரமாக பூரண அமைதியோடு அமர்ந்து இருப்பேன். அது.... கூறும். 63. அவர், "இப்பொழுது, சற்று நேரத்தில் உனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வரப்போகிறது. நீ இந்தப் பட்டணத்திற்குள் போகிறாய். நீ இந்தப் பட்டணத்திற்குப் போகும் போது, நீ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போவாய். அது இந்த விதமாக இருக்கும். அப்போது நீ அந்த அறைக்குள் போய், நீ உன்னுடைய தொப்பியை கீழே வைப்பாய். அல்லது, அந்த சீமாட்டி உன்னுடைய தொப்பியை படுக்கையின் மேல் வைப்பாள், ஆனால் அது அங்கே வைக்கப் படும்படி எதிர்பார்க்கப்படவில்லை. அது மேஜையின் மேல் வைக்கப்பட வேண்டுமென்று தான் எதிர்பார்க்கப்பட்டது. அப்பொழுது வேறொரு சீமாட்டி இந்த வழியாக உள்ளே வருவாள்” என்று கூறுவார். 64. அது எவ்வாறு செய்யப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவ்விதமே அப்படியே சரியாக எல்லாமே செய்யப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் அந்தக் காரியங்களில் ஒன்றையாகிலும் தவற விடுவேன் என்றால், அது நடக்காது. அது ஒரு தரிசனமாக இருக்கிற காரணத்தினால், அது சரியாக அந்த கணமாகவும், நேரமாகவும், எல்லாமே அதேவிதமான ஸ்தானத்திலும் இருந்தாக வேண்டும். அது - அது பரிபூரணமாக உண்மையாக நடந்தாக வேண்டியிருக்கிறது. அதன் பிறகு அது அவ்வாறு நடக்கும் போது, அது சம்பவித்தாக வேண்டியிருக்கிறது. அது ஒருக்காலும் தவறிப்போகாது,. இப்பொழுது, அது தேவன் தம்முடைய வரத்தை உபயோகிக்கும் போது. அது என்னை பலவீனப்படுத்துவதில்லை. அது என்னைத் தொந்தரவு செய்வதில்லை. 65. இப்பொழுது, இயேசு லாசருவை கல்லறையிலிருந்து உயிரோடெழுப்பின் போது, அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீயானவள் பெரும்பாடிலிருந்து சுகம் அடைந்ததைக் காட்டிலும் இன்னும் பெரிய அற்புதமாக இருந்தது. நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா-? (சபையார், ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) அவர் பலவீனம் அடைந்ததைக் குறித்து ஒரு வார்த்தையும் கூறவில்லை, மேலும் அவரிடமிருந்து வல்லமை வெளியே புறப்பட்டுச் சென்றது, ஏனென்றால் தேவன் தம்முடைய வரத்தை உபயோகித்துக் கொண்டிருந்தார். பாருங்கள்-? அது அந்த விதமான தரிசனமாக இருக்கிறது. அது அம்மாதிரியான தரிசனமாக இருக்கிறது. 66. ஆனால் ஜனங்கள் தேவனுடைய வரத்தை உபயோகிக்கும் போது, எது என்னை அவ்வண்ணமாக மேடையில் பலவீனமடையச் செய்கிறது, அது நீங்களாகவே தான். அது தான் அதைச் செய்து கொண்டிருக்கிறது. நீங்கள்... நீங்கள் தான் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள், அந்த செயலைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் தான் அது அதனூடாக இழுத்துக் கொண்டிருக்கிறது. அது ஒன்றில் நீங்கள் தேவனுடைய வரத்தை இழுப்பதாகவோ, அல்லது தேவன் தம்முடைய வரத்தை உபயோகிப்பதாகவோ இருக்கிறது. இப்பொழுது, ஒப்பீடு செய்து பார்க்கும் போது, நான்.... கூறியிருப்பேன். நீங்கள் என்னிடம், "அங்கே உள்ளே என்ன இருக்கிறது-?” என்று கேட்பீர்களானால். நல்லது, அது ஒரு ஒட்டகச்சிவிங்கி." "நீங்கள் வேறு எதைப் பார்க்கிறீர்கள்-? என்னது...-?” களைப்படைந்து கொண்டிருக்கிறேன், பாருங்கள், அது நீங்கள் காண்கிற வேறு ஏதோவொன்றாக இருக்கிறது. 67. ஆனால் இப்பொழுது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் அறியும்படியாக தேவன் விரும்பும் போது, அவர் உங்களை மேலே தூக்கி, முழு காரியத்திற்கும் மேலாக உங்களை மேலே எழுப்பி, "இதோ முழு சர்க்கஸ். பார்க்கிறாயா-? இது தான் முழு காட்சியும். நீ இதையும், இதையும், இதையும், அதையும் செய்யப் போகிறாய்" என்று கூறுகிறார். பிறகு உங்களைத் திரும்பவும் கீழே இருத்துகிறார். அவர் தம்முடைய நித்திய கரங்களாலும் சிறகினாலும் மேலே தூக்குகிறார். அங்கே உலகத்தில் எதுவுமே கிடையாது. நீங்கள் திரும்ப கீழே வருகிறீர்கள், அப்போது நீங்கள் ஜெயத்தை சத்தமிடுவது போன்று உணருகிறீர்கள். ஆனால் அது போதுமானது. 68. இப்பொழுது, பெரும்பாலான ஜனங்கள், தரிசனங்களைக் காண்கிற யாரோ ஒருவர் தெய்வீகமானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லை, ஐயா, எந்த விதத்திலும் அவ்வாறு இல்லை. இல்லை, ஐயா. தேவனைத் தவிர தெய்வீகமானவர்கள் யாருமே இல்லை. அவ்வளவு தான். அங்கே யாருமே.... கிடையாது. நம்மில் யாருக்குமே எந்த வித்தியாசமும் கிடையாது. நாமெல்லாரும் பாவிகளாக இருந்து, கிருபையால் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம். ஒருவர் மற்றவருக்கு மேலானவர்கள் இல்லை. அப்படியே, ஒருவருக்கு ஏதோவொரு காரியம் கொடுக்கப்பட்டிருக்கிறது, அவன் தன்னிடம் கொடுக்கப்பட்ட தாலந்துக்காக எதைச் செய்திருக்கிறான் என்று பதில் கூற வேண்டியிருக்கும். அது சரியே. ஒவ்வொரு நபரும் அதற்காக பதில் கூற வேண்டியிருக்கிறது. 69. இப்பொழுது, சற்றே சிறிது காலத்திற்கு முன்பு சம்பவித்த ஒரு தரிசனத்தை நான் உங்களிடம் கூறலாம். எனவே... இதைச் செய்யும்படியாக சகோதரன் ஜோசப் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார், அப்பொழுது இந்த பத்திரிகையின் வெளியீடு கிடைக்க முடியாமல் இங்கே கட்டிடத்திற்குள் இருக்கும் ஜனங்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். நான்.... செய்திருக்கிறேன். கர்த்தருடைய வியாதிப்பட்ட பிள்ளைகளுக்காக ஜெபம் செய்யும்படி, நான் முதலாவது கர்த்தருடைய ஊழியனாக ஆன போது, அந்தக் கதை உங்களுக்குத் தெரியும், நான் வியாதிப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்கும்படி பிறந்தேன் என்று அவர் எப்படியாக என்னிடம் கூறினார் என்ற காரியம். 70. இப்பொழுது, நீங்கள், "ஓ, வித்தியாசமான ஜனங்கள் இருக்கும் இடத்தில், அநேக நேரங்களில் அதைக் கேட்டிருக்கிறேன்" என்று கூறலாம். அதெல்லாம் சரிதான். பாருங்கள்-? அது, அவர்கள், வேறு யாரோ ஒருவருக்காக என்னால் - என்னால் பதில் கூற முடியாது. நான் எனக்காகவே பதில் கூற வேண்டியவனாயிருக்கிறேன், நீங்கள் உங்களுக்காக பதில் கூறியாக வேண்டும். இப்பொழுது அது உண்மையாக இருக்கிறது. 71. அப்போது அவர் அதை என்னிடம் கூறின் போது, அது அங்கே இந்த ஊழியத்தில் இருந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன், எண்ணிப் பார்க்க வேண்டிய ஏராளமான காரியங்கள் அங்கே இருக்க வேண்டியிருந்தது; அதில் ஒரு காரியம் பணமாக இருக்கிறது. நல்லது, நான் ஜனங்களுடைய பணத்தை எடுக்க மாட்டேன் என்று தேவனுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன். நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.... எனக்கு ஜனங்களுடைய பணம் அவசியமில்லை, ஆனால் அங்கே எனக்கு நிறைய பணம் கொடுக்கப்படும் என்பதை அறிந்திருந்தேன், நானோ அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. எனவே, அவ்வண்ணமாக நான் பணத்திற்காக பிச்சையெடுக்காமல், அவர் என்னுடைய வழிகளை வெற்றியடையச் செய்யும் காலம் வரையில், அவர் என்னை செழிப்புறச் செய்யும் காலம் வரையில், நான் ஊழியக்களத்தில் தரித்திருப்பேன் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவரிடம் அவ்வண்ணமாக இருந்து, நாங்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு, அல்லது பல மணி நேரங்களை எடுத்துக் கொண்டு, அல்லது நான் அப்போது சேர்ந்திருந்த என்னுடைய சொந்த ஸ்தாபனத்தில் அநேக நேரங்களில், நான் அதைக் கண்டிருந்தபடி, காணிக்கைகளை எடுக்கும்படி, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைச் செய்யும்படிக்கோ, அவர் என்னை கைவிடுவாரானால், அப்போது நான் -நான் ஊழியக்களத்தை விட்டு விலகி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். அவர் ஏறக்குறைய ஒன்பது வருடங்களாக என்னை ஆசீர்வதித்து வந்தார். ஆனால் கலிபோர்னியாவில், அது… 72. எவ்வாறேனும், என்னுடைய ஊழியம், கீழே விழத் தொடங்குவது போன்று தோன்றுகிறது. தபால்கள் குறைந்து விட்டன. ஜனங்களுக்கு ஆர்வம் இல்லாதது போன்று தோன்றுகிறது. 'நல்லது." நான், "தேவனே, அதெல்லாம் உம்முடைய கரத்தில் தான் இருக்கிறது" என்று நினைத்தேன். அங்கே, வழக்கமாக, எனக்கு ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஆயிரம் கடிதங்கள், அல்லது அதைப் போன்று ஏதோவொன்று வரும், அது கீழே போய், அறுநூறுக்கு குறைந்து, அதன் பிறகு ஐநூறு ஆகி, பிறகு நாநூறாக குறைந்து, முந்நூறு, நூறு, என்று வந்து, எங்கோ எழுபத்தைந்தாக குறைந்து விட்டது. அது ஏறக்குறைய ஒரு நாளைக்கு அவ்விதமாக குறைந்து போய் விட்டது, ஒருக்கால் ஒரு நாளுக்கு 75 கடிதங்கள் வரலாம். 73. நல்லது, நான், "நல்லது, என்ன நடந்தது என்று வியப்பாக உள்ளதே-? நான் ஏதாகிலும் செய்துள்ளது போன்று எனக்குத் தெரியவில்லை. ஜனங்களுக்காக, நான் (செய்ய) வேண்டி இருந்தால், ஏன், நான் -நான்-நான் வருந்துகிறேன் என்று நினைத்தேன். நிச்சயமாக, நான், நல்லது, எனக்குக் கிடைக்கவில்லையே..... நான் காரியங்களை விற்பனை செய்வது கிடையாது. ஜனங்கள் எனக்குக் கடிதம் எழுதுகிற ஒரே காரியம் என்னவென்றால், ஜெபத் துணிகளைப் (prayer cloths) பெற்றுக் கொள்ளவே தான். நாங்கள் அவைகளை விற்பனை செய்வதில்லை. நாங்கள் அவைகளை அவர்களுக்குக் கொடுக்கிறோம். எனவே, நல்லது, கர்த்தாவே, ஒருக்கால் நீர் காரியங்களை மாற்றப் போகிறீரோ” என்று நினைத்தேன். 74. நான் கலிபோர்னியாவுக்குப் போனேன், அப்போது, ஒரு கூட்டத்தில், ஏறக்குறைய - ஏறக்குறைய 15,000 டாலர்கள் கடனாகிப் போனது. அந்த இரவில், நான் அங்கிருந்து புறப்பட்ட போது, என்னிடம் சொல்லும்படியாக பில்லியிடம் கேட்டேன். அதற்கு நிதியுதவி செய்து கொண்டிருந்த அந்த அன்பான ஜனங்கள், அவர்கள் உத்திரவாதம் என்று ஒப்புறுதி அளித்தார்கள் (underwrote), அது மிக, மிக அருமையாக இருந்தது. ஆனால் அதுவல்ல கொடுத்த வாக்குறுதி. நான் என்ன செய்வேன் என்று தேவனுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன். 75. ஒரு அன்பு சகோதரன் என்னை அந்த இரவில் வீட்டிற்கு, நான் தங்கியிருந்த வெளியிலுள்ள அந்தச் சிறிய அறைக்கு அழைத்துச் சென்ற போது, நான் ஏறக்குறைய காலை 2 மணிக்கு மலையின் மேல் போனேன். நாங்கள் ஏறக்குறைய 4:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது. நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், சந்திரன் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. என்னால் அப்படியே அதைக் காண முடிந்தது. அது சென்ற இலையுதிர் காலத்தின் போது, நடந்த காரியமாகும். நான், பரலோகப் பிதாவே, இப்பொழுது நான் -நான் ஊழியக்களத்தை விட்டு விலகுகிறேன். நான் வீட்டிற்குப் போகிறேன். இது முதற்கொண்டு, நான் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புவதை எனக்கு வெளிப்படுத்தியருளும்” என்றேன். 76. இந்நிலையில், என்னால் பில்லியிடமும் அவர்களிடமும் அதைக் கூற முடியாதிருந்தது. நான் அவர்களிடம் கூற விரும்பவில்லை, என்னுடைய மனைவியிடமும் சொல்ல விரும்பவில்லை . ஆனால், "ஓ" நான், நான் அரிசோனாவை அடையும் போது, அவர்களிடம் கூறுவேன்” என்றேன். நல்லது, பிறகு நான், என்னுடைய தாயார் வந்திருந்த, டெக்ஸாஸின் பெரிய பழைய மாகாணத்தை அடைவது வரையில் நான் காத்திருப்பேன். நான் அங்கே அவர்களிடம் சொல்லுவேன்" என்றேன். அதன்பிறகு நான் அங்கேயும் போய்ச் சேர்ந்து விட்டேன். நான் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லுக்கு வருகையில், நான் அவர்களிடம் கூறினேன். நல்லது, பில்லி, அவன், அப்பா, நீர் செய்து கொண்டிருப்பதைக் குறித்து கவனமாக இருப்பது நல்லது. 'நான் சுவிசேஷத்தைப் பிரசங்கியாவிட்டால், எனக்கு ஐயோ' என்று வேதாகமம் கூறவில்லையா-?” என்றான். 77. அதற்கு நான், "சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுவதைக் குறித்து நான் ஒருபோதும் எதையும் சொல்லவில்லை. நான் சுவிசேஷ ஆராதனையைத் தான் சொல்ல வருகிறேன். இதோ பார், பில்லி, தேவன் எல்லாவிடங்களிலும் ஊழியக்களத்தில் மனிதர்களை வைத்திருக்கிறார். அங்கே வெளியே நான் அவருக்கு அவசியமில்லை. நான் திரும்பிச் சென்று, மீண்டும் என்னுடைய வேலையைப் பெற்றுக் கொள்ள முடியும், மேலும் - மேலும் மேய்ப்பராக இருக்கும்படி நான் போய், கூடாரத்திலோ, அல்லது ஏதோவொன்றிலோ மேய்ப்பராக இருப்பேன். நான் போய், அங்கே கீழேயிருக்கும் அந்தப் பழைய நாடகக்கொட்டகையை வாடகைக்கு எடுத்து, ஞாயிறு பிற்பகலில் ஒரு சர்வதேச கூடுகையையோ, ஒரு ஒலிபரப்பையோ, அல்லது ஏதோவொன்றைக் கொண்டிருக்கலாம். இப்பொழுது திடீரென்று என்னால் நிறுத்த முடியாது, ஏனென்றால் வீட்டிலே எனக்கு ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 டாலர்கள் செலவாகிறது. எனவே, என்னுடைய அலுவலகம் மற்றும் காரியங்களோடு என்னால் - என்னால் அதைச் செய்ய முடியாது. என்னால் அப்படியே நிறுத்திக்கொள்ள முடியாது, ஏனென்றால் என்னால் அதைச் செய்ய முடியாது” என்றேன். இந்நிலையில் என்னுடைய மனைவி, "பில்லி, நீர் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர் என்பதை அறிவீர் என்று நம்புகிறேன்” என்றாள். நான், "நல்லது, இப்பொழுது, எனக்கு - எனக்கு ஒரு காரியம் தெரியும்” என்றேன். 78. நான் இங்கே ஒருமுறை ஒரு கன்வென்சன் கூட்டத்தில், ஒரு கன்வென்சன் கூட்டத்திற்காக வரும் போது, அந்தக் கதை உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் சகோதரன் போஸ் அவர்களே, அந்த கன்வென்சன் கூட்டம் முடிந்த பிறகு, நான் வந்து, அவருக்காக இரண்டு நாட்கள், பிலதெல்பியா சபையில் பிரசங்கம் பண்ணுவேன் என்று, இங்கேயிருக்கும் என்னுடைய அன்பான இந்தச் சிறிய ஸ்வீடன் நாட்டு நண்பருக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். நான் அதைச் செய்வதில்லை என்று அவரிடம் கூறிவிட்டேன்; நான் அதைச் செய்தால், என்னால் ஒரு பேச்சாளராக இருக்க முடியாது. நான் என்னுடைய தெரிந்தெடுத்தலைச் செய்து கொள்ள முடிந்தது. நான், "நான் என்னுடைய வார்த்தையிலேயே தரித்திருப்பேன்" என்று கூறினேன். பிறகு நான் சகோதரன் ஜோசப் அவர்களிடம் சென்றேன். சரியாக. ஏனென்றால், நான் அதை மறுபடியும் செய்திருப்பேனே. தன்னுடைய வாக்கை காத்துக்கொள்ளாத ஒரு மனிதன் மிகவும் நல்ல மனிதன் அல்ல. 79. அந்த விதமாகத்தான் நான் தேவனை எடுத்துக் கொள்கிறேன். அவர் வார்த்தையைக் கொடுக்கிறார், நான் அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். அவர் அதைக் காத்துக் கொள்ளாவிட்டால், அது எனக்கு தேவனாக இருக்காது. நான்.... அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் அதைச் செய்வார், அவர் அதைச் செய்வார் என்று நான் அறிவேன். இப்பொழுது, அப்படியானால் நான்..... 80. அந்த இரவில், நாங்கள் வீட்டை அடைந்த போது, நான் படுக்கைக்குச் சென்றேன். என்னுடைய மனைவி அழுது கொண்டிருந்தாள். அவள், பில்லி, நீர் தவறு செய்கிறீரோ என்று நான் பயப்படுகிறேன். பிள்ளைகளோடும் என்னோடும் நீர் வீட்டில் இருப்பதை நான் விரும்புகிறேன் என்று உமக்குத் தெரியும். ஆனால், பில், என்ன நடந்துள்ளது என்பதைப் பாரும். அது உலகளாவிய ஒரு எழுப்புதலைத் தொடங்கி விட்டதே, ஊழியக்களத்தை விட்டு, தேவன் எங்கே உம்மை உள்ளே கொண்டு வந்திருப்பார் என்பதை என்னால் காண முடியவில்லை ” என்றாள். அதற்கு நான், நல்லது, நான் அவருக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அவர் சொன்னார்..." என்றேன். ஆனால் -ஆனால் -ஆனால் அவர் ஒருபோதும் உம்மிடம் சொல்லவில்லையே.” 81. நான், ஆனால், நான் அவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். புரிகிறதா-? அது தான் அதற்கான பதில். நான் அவருக்கு வாக்குக் கொடுத்தேன். நான் அவரிடம் எனது வாக்கைக் காத்துக் கொள்ளப் போகிறேன். நான் என்னுடைய சகோதரர்களிடம் வாக்கைக் காத்துக் கொள்வேன் என்றால், நிச்சயமாகவே, என்னுடைய இரட்சகரிடமும் அதைக் காத்துக் கொள்வேன்” என்றேன். இப்படியாக நான் உள்ளே சென்று, அந்த இரவு முழுவதும் நன்றாக உறங்கினேன். 82. அடுத்த நாள் காலையில், ஏறக்குறைய ஆறு மணிக்கு, நாங்கள் தூக்கத்தை விட்டு விழித்தெழுந்தோம். நான் அப்படியே படுக்கையை விட்டு விலகி வெளியே வந்தேன். அவள் மறுபக்கத்தில் இருந்தாள். நான் அப்படியே என்னுடைய முகத்தை இந்த விதமாக, தேய்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான், "நல்லது, இன்று பொதுச்சேவை நிறுவனத்தை தொலைப்பேசியில் அழைத்து, என்னுடைய பழைய வேலை மீண்டும் திரும்ப எனக்குக் கிடைக்க முடியுமா என்று கேட்கப் போகிறேன்" என்றேன். மேலும் நான், "அவர்கள் எனது வேலையைக் கொடுக்காவிட்டால், திரு.உட் அவர்கள் ஒரு கட்டிட கான்ட்டிராக்டராக இருக்கிறார், நான் அப்படியே அவரோடு போவேன். அவரும் நானும் வெளியே சென்று, சில கட்டிடங்களை, அல்லது எதையாவது உடைப்போம். நான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது, ஏனென்றால் நான் வேலைக்குப் போக வேண்டும். எனவே, ஏனென்றால் இந்தப் பணம் சந்திக்கப்பட்டாக வேண்டும், எனக்கு 15,000 டாலர்கள் கடன் உள்ளது. அப்படியானால் என்னால் என்ன செய்ய முடியும்-? நான் அதைத் திரும்ப செலுத்தியாக வேண்டும், அவர்கள் எவ்வளவு தான் ஒப்புறுதி உத்திரவாதம் (underwrote) தந்திருந்தாலும் காரியமில்லை , நான் -நான் அதைத் திரும்பச் செலுத்தப் போகிறேன். அது சரியே” என்றேன். இந்நிலையில் அவள், "நீர் திரு. திரு. பார் அவர்களை இந்தக் காலையில் தொலைப்பேசியில் அழைக்கவா போகிறீர்-?” என்று கேட்டாள். 83. நான், "ஆமாம். நான் அவரை அழைத்து, என்னுடைய வேலை திரும்ப எனக்குக் கிடைக்க முடியுமா என்று அவரிடம் கேட்கப் போகிறேன். அவர்….. இப்பொழுது, அந்த வேலை யாருக்காவது கிடைத்திருந்தால், அவர்களால் எனக்கு ஒரு நல்ல வேலையைத் தர முடியாது. அப்படியானால் நான் அப்படியே.... நான் சகோதரன் உட் அவர்களோடு சென்று, நாங்கள் கட்டிடங்களையோ வேறு ஏதோவொன்றையோ கட்டும்படி போவோம். நான் அவருக்கு உதவி செய்வேன்” என்று கூறினேன். எனவே நான், "நான் ஊழியக்களத்தை விட்டு வெளியே வருகிறேன் என்றால், நிச்சயமாக, அது அவரையும் கூட அதைவிட்டு வெளியே கொண்டுவரப் போகிறது, அவரால் திரும்ப கட்டிட கான்டிராக்டர் வேலைக்குப் போக முடியும், நாங்கள் வேலைக்குப் போக முடியும்” என்றேன். எனவே பிறகு… அவள், "நல்லது, பில், நீர் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறீர் என்று நிச்சயமாகவே நான் -நான் நம்புகிறேன்” என்றாள். அதற்கு நான், "நல்லது, நான்...” என்றேன். மேலும் நான் நோக்கிப் பார்த்த போது. வருகிறது, வீட்டின் உட்கூரையிலிருந்து கீழே இறங்கி வருகிறது.... ஓ, நான் ஒருக்கால்... நீங்கள் இதைப் புரிந்து கொள்ளும்படி என்னால் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் இயேசுவோடு முகமுகமாகச் சந்திக்கும்போது, அது ஏதோவொன்றாக இருக்கிறது, நீங்கள்...... வார்த்தையின் பேரில். இதோ ஏதோவொன்று வருகிறது, அசைவாடிக் கொண்டிருக்கிறது. இரண்டு சிறிய கறுப்பு நிற முகத்தை உடைய பிள்ளைகள் வந்து, கீழே இறங்கி, ஒரு சிறு பாரவண்டியை இழுத்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். நான், "இனிய இருதயமே, பார், இதோ வருகிறது” என்றேன். அப்போது நான் போய்விட்டேன். அவள், "நீர் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்-?” என்று கேட்டாள். என்னால் அவள் பேசுவதைக் கேட்க முடியவில்லை, ஆனால் என்னால் அவளுக்கு பதில் கூற முடியாதிருந்தது. இந்தச் சிறு பிள்ளைகள் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள், சிறிய ஒருவிதமான நீண்ட தலைமயிர்; கறுத்த, கறுப்பு நிற கண்கள்; பழுப்பு நிற முகம், அவர்கள் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். 84. அப்பொழுது நான் அசைந்து செல்வதை நான் - நான் கண்டேன். அந்தப் பிள்ளைகளுக்கு அப்பால், அநேக தடவைகள் என்னோடு கூட வெளிநாடுகளுக்கு வந்திருந்த என்னுடைய சகோதரனாகிய திரு. ஆர்கன்பிரைட் அவர்களைக் கண்டேன், அவர் அங்கே நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் அவரை நோக்கி அசைந்து சென்றேன். இப்பொழுது, என்னால் இன்னுமாக எனது மனைவி அந்த அறையைச் சுற்றிலும் நடந்தபடி, பேசுவதைக் கேட்க முடிந்தது. 85. நான் அதை இந்தவிதமாகக் கூறுகிறேன், அப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள். அது சரியான வார்த்தைகளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவ்வண்ணமாக நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நான் ஒரு பரிமாணத்தில் இருந்துகொண்டு, பிறகு வேறொரு பரிமாணத்திற்குள் போயிருந்தேன். அவள் நடந்து கொண்டிருப்பதை அதற்கு மேலும் என்னால் கேட்க முடியாதிருந்தது. அது போய் விட்டிருந்தது. 86. நான் திரு. ஆர்கன் பிரைட் அவர்களைக் கண்டேன். அவர் தம்முடைய அசாதாரணமான சிறு வழியில் இருந்தார், அவர் என்னைப் பார்க்கையில், தம்முடைய தலையைப் பிடித்துக் கொண்டும், ஒருவித புன்முறுவல் செய்து கொண்டும் அந்த விதமாக இருந்தார். அவர், சகோதரன் பிரன்ஹாமே, நாங்கள் எல்லாவிடங்களிலும் ஜெப அட்டைகளைக் கொடுத்து விட்டோம் (put out). நீர் உள்ளே வரவும், வெளியே போகவும் உமக்கு ஒரு வழியை நாங்கள் வைத்திருக்கிறோம். எல்லாமே ஆயத்தமாயிருக்கிறது” என்றார். நான், "சரி, சகோதரன் ஆர்கன் பிரைட் அவர்களே, நான் எந்த வழியாகப் போக வேண்டும்-?” என்று கேட்டேன். அவர், அப்படியே தொடர்ந்து வாருங்கள்” என்றார். நான் தொடர்ந்து நடக்கலானேன். நான் சில ஊழியக்காரர்களைக் கடந்து சென்றேன். அப்போது, நான் சற்று அதிகத் தூரமாக நடந்து சென்று, ஒரு மகத்தான பரந்த காட்சிமை காரியத்திற்குள் வந்தேன், அது எல்லா விதமாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் உட்கார இருக்கைகள் இருப்பது போன்று தோன்றினது. சற்று கழிந்து, யாரோ ஒருவர், அந்தக் கூட்டம் கலைந்து சென்றுவிட்டது" என்று கூறுவதைக் கேட்டேன். 87. "நல்லது,” நான், "யார் அதை கலைந்து போகச் செய்தது-? அது எவ்வாறு கலைந்து போகும்படி ஆனது-?" என்று கேட்டேன். நான் விவாதம் செய்து கொண்டிருந்தேன். நான், அது ஏன் கலைந்து போகும்படி செய்யப்பட்டது-? என்ன நடந்தது-?” என்றேன். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஏதோவொன்று என்னிடம், "இதன் மூலமாக, நீ அறிந்துகொள்வாய்” என்றது. அப்போது, நான், "நல்லது, நான்.." என்றேன். 88. அப்போது நான் உள்ளே சென்று, நான் தரிசனத்திற்குள் அதிகத் தூரமாக இருந்தேன். அது அவ்வாறு செய்த போது, நான் கூட நின்று கொண்டிருந்தேன், உங்களுக்குத் தெரியும், ஏறக்குறைய ஒரு வயதுடைய ஒரு சிறு குழந்தையின் காலணி. அந்தச் சின்னஞ்சிறிய சிறு துவாரம், அது உங்களுக்குத் தெரியும்; அது ஒரு கம்பளத்தால் செய்யப்பட்ட குழந்தையின் காலணி அல்ல, ஆனால் ஒரு - ஒரு காலணி (ஷூ). நான் என்னுடைய கையில் ஒரு - ஒரு லேசான மென்கயிற்றை வைத்துக்கொண்டு, இந்த துவாரத்தில் (eyelet) உள்ள ஒரு அங்குலத்தில் எட்டில் ஒரு பங்கு உடைய இந்தச்சிறு துளையில் காலணியை நாடாவினால் கட்டும்படி (lace) முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்படியே ஆர்வத்துடன் அந்த வேலையைச் செய்து கொண்டு, அந்த லேசான கயிற்றை அதனூடாக நுளைக்க முயற்சித்துக் கொண்டு இருந்தேன், அரை அங்குலம் கொண்ட லேசான கயிற்றை எட்டில் ஒரு பாகம் அங்குலம் உடைய சிறு துவாரம் வழியாக நுழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான் அந்த நூல்களை, அந்த லேசான கயிற்றை எல்லாவிடங்களிலும் அறுத்து, அவ்விதமாக அதன் வழியாக அதைத் தள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். அது நுழையவேயில்லை. அந்த லேசான கயிற்றின் நுனியில், முழுவதுமாக அறுக்கப்பட்டிருந்தது. 89. இந்நிலையில், சற்று கழிந்து, எனக்குப் பின்னால் இருந்த யாரோ ஒருவர், குழந்தைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை உன்னால் போதிக்க முடியாது என்பது உனக்கு விளங்கவில்லையா-?” என்று கூறுவதை நான் கேட்டு, நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அது எனக்குப் பின்னால் இருந்தது. நான் அந்த சத்தத்தை அடையாளம் கண்டு கொண்டேன். அவர், "நீ அந்த லேசான கயிற்றின் தவறான நுனியை உபயோகித்துக் கொண்டிருக்கிறாய்” என்றார். 90. அப்போது நான் தரையில் கிடந்த அந்த லேசான கயிற்றின் நுனியை கீழே நோக்கிப் பார்த்தேன், ஒரு பெரிய குவியலாக லேசான கயிறுகள் இருந்தன, அது ஒரு அருமையான ஒரு அங்குலத்தில் எட்டில் ஒரு பங்காயிருந்ததோடு காலணி கட்டப்பட்டிருந்தது, எனவே அது அந்த துவாரத்தின் வழியாக நுழைந்தது. நான், "எனக்குப் புரிகிறது” என்றேன். 91. நான் அந்த லேசான கயிறை எடுக்கும்படியாக எட்டி, அதை மறுபடியும் எடுத்தேன். இப்பொழுது, நீங்கள் இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது சம்பவிக்கிறதா என்று கவனியுங்கள். புரிகிறதா-? நான் -நான் கீழே எட்டுகையில், நான் மீண்டும் போய்விட்டேன். பிறகு, எனக்கு சுயநினைவு வந்த போது, நான் ஒரு அழகான ஏரியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன், இங்கே வெளியிலுள்ள உங்களுடைய ஏரியானது, கோடை காலத்தில் மிகவும் அழகாயும் பச்சை நிறமாகவும் இருப்பது போன்ற ஏதோவொன்றாக அது இருந்தது. அங்கே அந்த ஏரியைச் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் மீனவர்கள் இருந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் சிறிய மீன்களையே பிடித்துக் கொண்டிருந்தார்கள். நான் அந்த ஏரிக்குள் நோக்கிப் பார்த்தபோது, அந்தப் பெரிய, அழகான நன்னீர் வகை மீன்கள் (rainbow trout) அங்கே இருந்தன, நான், "இது ஒரு தரிசனம் என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னால் அந்த ஒரு வகைக் குளத்து மீனைக் குறித்துப் புரிந்துகொள்ள முடியவில்லையே. ஆனால், உங்களுக்குத் தெரியும், என்னால் அவைகளைப் பிடிக்க முடியும் என்று என்னுடைய இருதயத்தின் கீழே நான் நம்புகிறேன்" என்று கூறினேன். இப்படியாக, நான் அந்த லேசான கயிற்றை தூக்கினேன், ஆனால் அது ஒரு லேசான கயிறாக இருப்பதற்குப் பதிலாக, அது மீன்பிடிக்கும் ஒரு கம்பாக இருந்தது. 92. சற்று கழிந்து, எனக்குப் பின்னால் இருந்தவர், இப்பொழுது, எப்படி மீன்பிடிப்பது என்றும், எப்படி அவைகளைப் பிடிப்பது என்றும் நான் உனக்குக் கற்பிக்கிறேன்” என்றார். எனவே அவர்... எடுத்தார். அவர், தூண்டிலில் (lure) தூண்டில் இரை கட்டு” என்றார். நான் தூண்டிலில் தூண்டிலில் இரையை அதிர்வூட்டினேன். அவர், இப்பொழுது, போடு” என்றார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், "ஆழத்திற்குள் போடு." மேலும் அவர், "நீ அவ்வாறு போடும்போது, இப்பொழுது, முதலில் அந்த தூண்டில் கீழே மூழ்கட்டும். பிறகு, அதை மெதுவாக இழு" என்றார். இப்பொழுது, அது உண்மையிலேயே மீன் பிடிப்பவர்களின் உத்தியாக இருக்கிறது. எனவே நான்... 93. அவர், "பிறகு , நீ அவ்வாறு செய்யும் போது, இப்பொழுது, அதில் கொஞ்சம் சிறுகச் சிறுகக் கொரித்து தின்னுவதை உணருவாய், ஆனால் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று எவரிடமும் கூறாதே. அதை உனக்குள்ளேயே வைத்துக்கொள். அதன்பிறகு மறுபடியுமாக சிறு துண்டுகளாகக் கடிப்பதை நீ - நீ உணருகிறாய், அப்போது சற்றே கொஞ்சம் அதை இழு, ஆனால் அதி வேகமாக இழுக்காதே, பிறகு அந்தச் சிறு மீனிடமிருந்து அதை தூரமாக இழுப்பாய். அவைகள் அங்குமிங்கும் சிதறிப்போகும் போது, அது பெரிய மீனின் கவனத்தை ஈர்க்கும், அவைகள் அதைப் பிடிக்கும். அந்தவிதமாகத்தான் நீ அதைப் பிடிப்பாய். அப்போது, அவைகள் மூன்றாம் முறையாக கடிக்கும் போது, அதைப் பிடிப்பதற்காக உன்னுடைய தூண்டில் முள்ளை சரிசெய் (set)" என்றார். நான், எனக்குப் புரிகிறது" என்று கூறினேன். ஆனால் பேசாமல் அமைதியாக இருந்துவிடு. யாரிடமும் கூறாதே. பேசாமல் இரு” என்றார். அதற்கு நான், "சரி" என்று கூறினேன். 94. நான் என்னுடைய கரத்தில் தூண்டிலை வைத்திருந்தேன். மீன் பிடிக்கிற இவர்கள் யாவரும் ஊழியக்காரர்களாக இருக்கும்படி நேரிட்டது, அவர்கள் எல்லாரும் சூழ்ந்து வந்து, "சகோதரன் பிரன்ஹாமே, உம்மால் மீன் பிடிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 95. ஓ, நிச்சயமாக, அது என்னை மிக நன்றாக உணரும்படி செய்தது. நான், ஓ, ஆமாம், நான் ஒரு மீன்பிடிப்பவன். என்னால் மீன் பிடிக்க முடியும்" என்று கூறினேன். மேலும் அவர் கூறினார்.... நான், "இப்பொழுது, இதோ நீங்கள் இந்தவிதமாகத்தான் செய்ய வேண்டும். நீங்கள் அதைப் போட வேண்டும்” என்று கூறினேன். நான் வெளியே ஆழமான தண்ணீரில் சென்று, "இப்பொழுது, இந்தச் சிறிய மீன் அருமையாக இருக்கிறது, சகோதரர்களே, ஆனால் நமக்குப் பெரிய மீன்களும் கூட தேவைப்படுகிறது” என்று கூறினேன். நான்... நான், 'நல்லது, பாருங்கள், அது கீழே மூழ்கும்போது, இப்பொழுது பாருங்கள், அதோ அது இருக்கிறது, சற்றேறக்குறைய அது எங்கே இருக்க வேண்டுமோ அங்கேயிருக்கிறது. இப்பொழுது, அங்கே இருப்பதைப் பாருங்கள், பாருங்கள், அதோ-அதோ அவைகள் சிறிய மீன்களாக உள்ளன. இப்பொழுது, அது மறுபடியும் சரி செய்யப்படும் போது.... என்றேன். 96. நான் அதை மகா பெரிதாக சட்டென இழுத்தேன், நான் அவ்வாறு செய்த போது, நான் மொத்த தூண்டிலையும் தண்ணீரை விட்டு வெளியே இழுத்து விட்டேன். நான் அவ்வாறு இழுத்த போது, நான் ஒரு மீனைப் பிடித்தேன், ஆனால் எப்பொழுதாவது எப்படித்தான் அதனுடைய வாயில் தூண்டில் சிக்கியதோ என்று வியப்படைந்தேன். ஏனென்றால், அது தூண்டில் மேலே வெறும் நீளமாயிருந்த தோலைப் போன்றே காணப்பட்டது, ஏறக்குறைய அந்த தூண்டில் இரையின் அதே அளவில் தான் இருந்தது. நான், "ஓ, என்னே-!' என்று நினைத்தேன். 97. சற்று கழிந்து, எனக்குப் பின்னால் பேசிக்கொண்டிருந்தவர், எனக்கு முன்பாக அடியெடுத்து நடந்து வந்தார். அது அவராக, கர்த்தருடைய தூதனானவராக இருந்தது. அவர் தம்முடைய கரங்களை மடக்கி வைத்திருந்தார். அவர் என்னை நோக்கிப் பார்த்து, "எதைச் செய்யக்கூடாது என்று நான் உன்னிடம் கூறினேனோ அதையே-!" என்றார். நான், ஆமாம். அது சரியே” என்றேன். 98. அவர், "நீ பார், முதலாவது இழுப்பானது வழக்கமாக உன் கரங்களை ஜனங்கள் மேல் வைத்து அவர்களுடைய கோளாறு என்னவென்று அவர்களிடம் கூறும்போது இருந்தது. இரண்டாவது இழுப்பானது நான் உன்னிடம் கூறினதுபோன்று, இருதயத்தின் இரகசியங்களை நீ அறிந்தபோது இருந்தது. அதை உனக்குள்ளேயே வைத்திருப்பதற்குப் பதிலாக, அதைக் குறித்து எல்லாரிடமும் விளக்கிக் கூற முயற்சித்து, ஜனங்களிடம் கூறினாய். நீ அவ்வாறு செய்த போது, உனக்கே அதைக் குறித்து எதுவும் தெரியாதிருந்தது. உன்னால் எப்படி அதை விளக்கிச் சொல்ல முடியும்-? ஒரு பெருங்கூட்டம் மாம்சபிரகாரமான ஆள்மாறாட்டங்கள் எழும்ப நீ காரணமாகி விட்டாய், நீ என்ன செய்திருக்கிறாய் என்பதைப் பார்” என்று கூறினார். அதற்கு நான், 'ஆண்டவரே, நான் வருந்துகிறேன்” என்றேன். மேலும் நான் -நான், ஓ, நான் மிகவும் வருந்துகிறேன்-! என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை என்றேன். 99. நான் அந்த தூண்டில் கயிற்றை (line) இந்த விதமாக இழுத்துக்கொண்டு, என்னுடைய தூண்டில் கயிற்றை (line) நேராக ஆக்க முயன்று கொண்டிருந்தேன். அவர் என்னை நோக்கிப் பார்த்து, "இப்பொழுது, இம்மாதிரியான நேரங்களில், உன்னுடைய தூண்டில் கயிற்றை (line) பின்னி சிக்கலாக்கி விடாதே” என்றார். 100. நான், "ஒருக்கால் நான் இன்னொரு முறை முயற்சி செய்ய, அவர் எனக்கு தரப் போகிறாரோ" என்று நினைத்தேன். மேலும் நான்... நான், "நான் நிச்சயமாக கவனமாய் இருப்பேன்” என்றேன். என்னுடைய தூண்டில் கயிற்றை (line) சுற்றிக் கொண்டிருந்தேன், அப்போது அது சரியாக மேலே எடுக்கப்பட்டதைக் கண்டேன். 101. அதன்பிறகு அவர் அதைக் கூறினபோது, நான் உயரமாக, மேலே போவதாக உணர்ந்தேன். நான் உட்கார்ந்த போது, நான் அடியில் இருந்தேன், மேலே நின்று கொண்டிருந்தது, அது ஒரு பெரிய கூடாரம். நான் அப்படிப்பட்ட ஒரு கூடாரத்தை ஒருபோதும் கண்டதில்லை-! 102. மேலும் நான் பீடத்தில் வைத்து, ஒரு பீட அழைப்பு கொடுப்பது போன்று தோன்றினது. நான் அங்கே கீழே இருந்து, நான் நோக்கிப் பார்த்தபோது, அங்கே நூற்றுக்கணக்கான ஜனங்கள் பீடத்தைச் சுற்றிலும் நின்று கொண்டு, கதறி அழுது கொண்டிருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அப்படியே உரத்த சத்தமாக அழுது கொண்டிருந்தார்கள். நான், ஓ, அது அந்தவிதமாக, அதை அதிகம் விரும்பத்தக்கதாக உள்ளது” என்றேன். 103. அப்போது மிகவும் அன்பான ஒரு நற்குடி பெருமகன் மேடைக்கு நடந்து வந்து, "சகோதரன் பிரன்ஹாம் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், நாம் ஜெப வரிசையை அழைப்போம். ஜெப அட்டைகளை வைத்திருக்கிற ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து தொடங்கி, வலப்பக்கமாக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார். நல்லது, நான் ஜெப வரிசையைக் கவனித்தேன், அது அந்தக் கூடாரத்தை சுற்றிலும் எல்லா இடங்களிலும், வெளியிலும், வீதியிலும் போனது போல் தோன்றினது. அப்படிப்பட்டதொரு ஜெப வரிசை-! 104. அப்போது என்னுடைய இடது பக்கத்தை நோக்கியிருந்ததை நான் கூர்ந்தாராய்ந்து பார்த்தேன்; நான் அந்த விதமாக நின்று கொண்டிருந்திருந்தால், அது என்னுடைய வலப் பக்கமாக இருந்திருக்கும். அங்கே ஒரு துண்டு திரைச்சீலை (canvas) நீட்டிக் கொண்டிருந்தது. இந்த திரைச்சீலைக்கு (canvas) பின்னால் ஒரு சிறிய, சதுர வடிவிலான கட்டிடம் இருந்தது, அது ஏறக்குறைய 12 அடி குறுக்காகவும், 20 அடி நீளமாகவும், அதைப்போன்ற ஏதோவொன்றாக இருந்தது. நல்லது, நான் நின்று அதை நோக்கிப் பார்த்தேன். 105. அப்போது அவர்கள் தூக்குப்படுக்கையில் இருக்கும் ஒரு சீமாட்டியை மேலே கொண்டு வருவதைக் கண்டேன். அங்கே ஒரு சீமாட்டி இருந்து, அவளுடைய பெயரையும் மற்றும் காரியங்களையும் ஒரு... ஒரு - ஒரு தாளில் பதிவு செய்து கொண்டிருந்தாள். இந்நிலையில் யாரோ ஒருவர் வந்து, அவளைப் பற்றிக்கொண்டு, அவளை அதனூடாக தள்ளினார். அடுத்த மனிதன் அதனூடாக ஊன்றுகோல்களோடு வந்தான். அவர்கள் அந்தச் சிறிய கட்டிடத்தின் ஊடாக போவதைக் கண்டேன். வெளியே, அந்த சீமாட்டி வந்தபோது, அவள் உச்சகுரலில் கூச்சலிட்டுக் கொண்டு, இந்த தூக்குப் படுக்கையை தள்ளிக் கொண்டு வந்தாள். மேலும்… அதன் பிறகு அங்கே மற்ற பக்கத்தில் வேறொரு சீமாட்டி இருந்தாள், அவள் ஒருவித கருமைநிற தலைமயிரை உடைய ஸ்திரீயைப் போன்று காணப்பட்டது, அவள், "என்ன நடந்தது-?” என்று கேட்டாள். 106. அதற்கு அவள், எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தது என்று என்னால் உங்களிடம் கூற முடியவில்லை . நான் 20 வருடங்களாக முடக்கு வாதத்தால் தாக்கப்பட்டிருந்தேன். இதோ பாருங்கள், நான் -நான் - நான் ஒருக்காலும் வியாதிப்படவேயில்லை என்பது போன்று நான்... நான் உணருகிறேன் என்றாள். சற்று கழிந்து, அந்த மனிதன் வெளியே வந்தான், அவன் தன்னுடைய -தன்னுடைய ஊன்றுகோல்களை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு, துள்ளிக்குதித்துக் கொண்டு இருந்தான். நான் -நான் அதை நோக்கிப் பார்த்தேன். மேலும் சற்று கழிந்து… 107. இப்பொழுது, இங்கே ஏதோவொரு காரியம் இருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள். கர்த்தருடைய தூதனானவருக்கும் அந்த ஒளிக்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஏனென்றால், இரவில், இங்கே மேடையில் அது வரும் போது, அது ஒரு விதத்தில், "வியூ-! வியூ-! வியூ-!" என்பது போல, அது செய்வது போன்று, ஏதோவொன்று அசைந்து கொண்டிருப்பதை நான் கேட்டேன், மேலும் அக்கினி மிக வேகமாக சுழலுவது போன்று, வேகமாக வந்து தொடுகிற பற்றியெரியும் ஜூவாலையைப் (licking blaze) போன்று அது இருக்கிறது. அது என்னை விட்டு, அந்தக் கூட்டத்தினரின் (audience) மேலாக இறங்கி சென்று, அது போய், அந்தச் சிறிய கட்டிடத்தின் உச்சிக்கு மேலாக நின்று, பிறகு அதன் மேல் அமர்ந்தது. அப்போது, அது அவ்வாறு அமர்ந்த போது, எனக்கு அருகில், எனக்குப் பின்னால் நின்று கொண்டிந்த, இந்த ஒன்று, அந்த அதே தூதனானவரின் சத்தமானது, அவர், "நான் உன்னை அங்கே உள்ளே சந்திப்பேன். இதுதான் மூன்றாம் இழுப்பு, ஆனால் அதைக் குறித்து யாருமே எதையும் அறிய மாட்டார்கள்” என்றார். அதற்கு நான், நல்லது, எனக்கு இது புரியவில்லையே. ஏன் அங்கே உள்ளே-? ஏன் அங்கே-?” என்று கேட்டேன். அவர், "இந்நேரத்தில், அது ஒரு பொது காட்சியாக இருக்காது” என்றார். மேலும் நான், அதைப் போன்ற அந்தச் சிறு தனியறைக்குள் போவது, எனக்குப் புரியவில்லையே” என்றேன். 108. அதற்கு அவர், "நீ ஜெபம் பண்ணும் போது, மனுஷருக்கு முன்பாக கேட்கப்பட வேண்டும் என்று விரும்பும் மாயக்காரர்களைப் போல இருக்க வேண்டாம். ஆனால் நீயோ இரகசிய அறைவீட்டிற்குள் பிரவேசித்து, அந்தரங்கத்தில் பார்க்கிற பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு ; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற அவர் உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்' என்று நம்முடைய ஆண்டவரால் எழுதப்பட்டு இருக்கவில்லையா-?” என்று கூறினார். அது பரிபூரணமாக வேத வாக்கியத்தின் பேரிலேயே உள்ளது. ஒவ்வொரு முறையும், அது அவ்வாறு தான் உள்ளது. அதற்கு நான், "எனக்குப் புரிகிறது” என்றேன். 109. அதன்பிறகு அவர் என்னை இந்த இடத்திற்கு எடுத்துச் சென்று, நான் இருந்த இடத்திலிருந்த இந்த அறைக்குள்ளே என்னை உட்கார வைத்தார். அப்போது மூன்றாம் முறையாக என்ன செய்ய வேண்டுமென்று அவர் என்னிடம் கூறினார். இப்பொழுது, கிறிஸ்தவ நண்பர்களே, அது இருக்கும், நான் இந்த உலகத்தை விட்டுப் போகும் போதும், அது இன்னுமாக என்னுடைய நெஞ்சிலேயே இருக்கும். நான்... ஆனால், என்ன சம்பவிக்கப் போகிறது என்ற என்னுடைய வார்த்தைகளை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 110. ஆனால் நான் போனிக்ஸிற்குப் போய்க் கொண்டிருந்ததாக எண்ணினேன். நம்முடைய அன்பு சகோதரனும் மற்றும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிற சகோதரனாகிய திரு. ஆலன் அவர்கள், அவர் அங்கே உள்ளே சென்றார். அவர், "இல்லை. நான் இங்கேயே தங்கப் போகிறேன், எனவே நான் மாதத்தின் அந்தப் பாகத்திற்காக புறப்பட்டுப் போகப் போவதில்லை " என்றார். நல்லது, அப்போது நான் அங்கே உள்ளே என்னுடைய சகோதரனோடு கூட போயிருக்க மாட்டேன். நான் அதைச் செய்திருக்க மாட்டேன். எனவே, சகோதரன் ஆலன் அவர்களை எனக்குத் தெரியாது. ஆயினும் அவர் கர்த்தருடைய வேலையை அங்கே வெளியில் செய்து கொண்டிருக்கிறார். எனவே நான்... அவர்கள், "இல்லை . அவர் தங்கப் போவதாக இருந்தார்” என்றார்கள். நான் சொன்னேன்.... 111. நல்லது, அந்த சகோதரர்கள், அங்கேயிருந்த சங்கத்தார், ஊழியக்கார கூட்டத்தார் என்னை அழைத்தார்கள். சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் போன போது, நான் சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களுடைய இடத்தை எடுக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது. நான், நல்லது, அதெல்லாம் சரிதான். அவர்கள் அங்கே யாரோ ஒருவரைப் பெற்றிருப்பார்களானால், சகோதரன் ஆலன் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார், நான் போக மாட்டேன். அது சகோதர அன்புள்ளதாக இருக்காது" என்றேன். எனவே நான், "சரி” என்றேன். ஒரு சில நாட்கள் கழித்து, சகோதரன் ஆர்கன்பிரைட் அவர்கள் என்னை அழைத்து, "சகோதரன் பிரன்ஹாமே, நான்..... சகோதரன் மூரிடம் பேசிவிட்டேன். ஏன் மெக்ஸிகோவுக்குப் போகக் கூடாது-?” என்றார். அதற்கு நான், "ஓ, பரோன் வான் ப்ளொம்பெர்க் அவர்களும் அவர்களில் நிறைய பேரும் மெக்ஸிகோவுக்கு என்னை அழைத்துச்செல்ல முயற்சித்தார்கள். போவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றேன். நான், "நாம் எங்காவது அமெரிக்க கூட்டத்தை நடத்துவோம். நான் முதல் தடவையாக அங்கே அந்தக் கூடாரத்தை அமைக்க விரும்பினேன்" என்றேன். அதற்கு அவர், "நல்லது, ஏன் மெக்ஸிகோவுக்குள் போகக் கூடாது-?” என்று கேட்டார். நான், "நல்லது, சரி. நான்... நீர் அதைக் குறித்து பார்த்துக்கொள்ளும்” என்றேன். 112. இந்நிலையில் அங்கே வேறொரு மனிதரும் இருந்தார். அவர் திரும்ப அழைத்து, அந்தக் கூட்டங்கள் எல்லாமும் அதே தேதிகளில் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கே இருக்கும் ஒரு மகத்தான பெரிய அரங்கத்தின் உள்ளே நாம் அதைக் கொண்டிருக்கிறோம்" என்றார். 113. அந்த இரவில், நான் திரு. உட்ஸ் அவர்களிடம் இருந்தேன். நான், அது சரி என்று உமக்குத் தெரியும். 'சிறிய, கறுப்பு நிற முகமுடைய பிள்ளைகள், அது இந்தியனைப் போன்று காணப்பட்டது,' அது தான் தரிசனம்" என்று நினைத்தேன். அதன் பிறகு நான், ஆனால், வினோதமான காரியம் என்னவென்றால், அது ஒரு அகலப் பரந்த காட்சிமையில் (panoramic) இருப்பது அவசியமாயிருந்தது, மேலும் 'கலைந்து போவதைக் குறித்த ஏதோவொன்றாக இருந்தது என்றேன். எனவே பிறகு நாங்கள்.... 114. இரண்டு நாட்கள் கழித்து, திரு. ஆர்கன்பிரைட் அவர்கள் தொலைபேசியில் அழைத்து, சகோதரன் பிரன்ஹாமே, நமக்கு பெரிய எருதுச்சண்டை நடக்கும் இடம் (bullring) கிடைத்து இருக்கிறது. மெக்ஸிகன் அரசாங்கமானது நீர் உள்ளே வர அனுமதியளித்துள்ளது, மெக்ஸிகோ வரலாற்றிலேயே, அரசாங்கம் மூலமாக, எப்பொழுதாவது ஒரு கத்தோலிக்கர் அல்லாதவரை உள்ளே வர அனுமதிப்பது (இதுவே முதன்முறையாகும்” என்று கூறினார். எனவே நான், அது அற்புதமானது" என்றேன். எனவே நான், இப்பொழுது, ஏதோவொன்று நடக்கப்போகிறது. நமக்கு பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது” என்றேன். 115. உங்களுக்குத் தெரியும், நாங்கள் மெக்ஸிகோவுக்குப் போய், ஆயத்தமாகி, அந்த எருதுச்சண்டை நடக்கும் இடத்திற்குப் போனபோது, யாரோ ஒருவர்.... அப்போது மழை பெய்து கொண்டிருந்தது, அங்கே சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் அந்தக் கூட்டங்களை கலைந்து போகப் பண்ணியிருந்தார். இன்னுமாக யார் அதைச் செய்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை . அது சரியே. அது முற்றிலும் சரியே. 116. அதன்பிறகு நான் வீட்டிற்குத் திரும்பி வந்து, இரண்டாவது நாள் திரும்பவும் விரைந்து சென்றேன். எங்களால்... கூட முடியாதிருந்தது. சகோதரன் மூர் அவர்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நான்-நான் அதைக் கண்டுபிடிக்கிறேன்" என்று கூறினார். எங்கேயும் எங்களால் ஒரு ஊழியக்காரரையாகிலும் பெற்றுக் கொள்ளவும் கூட முடியாதிருந்தது. யாருக்குமே அதைக் குறித்து தெரியாதிருந்தது. சகோதரன் மூர் அவர்கள், "நான்... சகோதரன் பிரன்ஹாமே, நான் எவ்வளவுக்கெவ்வளவு உம்மைப் பின்தொடர்ந்து வந்தும், இந்நேரம் வரையில் நான் உம்மை ஒருபோதும் நம்பவேயில்லை, இப்பொழுதோ நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்று கூறினார். அதற்கு நான், "அது சரி” என்றேன். இப்படியாக, நாங்கள் பிரயாணம் செய்து திரும்பினோம். அப்போது திரு. ஆர்கன்பிரைட் அவர்கள் என்னைக் காண்பதற்காக தம்முடைய பாதையில் இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன். 117. நான் வெளியே என்னுடைய குகையில் ஜெபிக்கும்படியாகச் சென்று, என்னவென்று கர்த்தரிடம் கேட்டேன். அவர் வேறொரு தரிசனத்தை எனக்குக் காட்டினார். அவர், "செத்துப் போன மீன்கள்" என்றார். அது கிடந்தது, அது என்னவென்று அவர் என்னிடம் கூறினார். "திரும்பிச் செல். ஆனால் உண்மையில் இது அந்த நேரம் அல்ல, ஆனால் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றார். 118. நான் அங்கே திரும்பிச் சென்றேன், ஏதோவொரு இடத்தில், ஏறக்குறைய நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் பேர் கிறிஸ்துவிடம் வருகிறார்கள். மரித்துப் போன ஒரு குழந்தை மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததும், மற்றும் மகத்தான காரியங்களும் சம்பவித்தன. 119. இப்பொழுது நான் அந்த வேளைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது இது எவ்வளவு சிறியதாக காணப்படுகிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும், இந்தக் காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சம்பவித்திருக்கிற இந்த மகத்தான காரியங்கள். 120. வேறொரு இரவில், நான், அறிந்திருக்கவில்லை... நான் பிலதெல்பியா சபையில், இந்தக் குருடான பெண்மணிக்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில், தங்கள் கண்களை உயர்த்துகிற நபர் சபிக்கப்பட்டவனாக இருப்பான்" என்று கூறியதை அவர்கள் கேட்டபோது, எத்தனை பேர் அங்கேயிருந்தீர்கள்-? அதைத்தான் நான் செய்து கொண்டிருந்தேன். பாருங்கள்? 121. நண்பர்களே, கர்த்தர் தம்முடைய ஜனங்களிடம் ஒரு மகத்தான, அற்புதமான ஏதோ ஓன்றில் விஜயம் செய்யப் போகிறார். நான்... அது என்னுடைய இருதயத்தில் ஒரு இரகசியமாக (secret) இருந்தாக வேண்டும். ஆனால் நீங்கள் என்னை அறிந்துள்ளபடி, நீங்கள் என்னை விசுவாசித்து, என்னை நேசித்து, தேவனுடைய ஊழியக்காரனாக என்னைக் கனம் பண்ணுகிறபடி, அப்படியே இது நினைவிருக்கட்டும், பாதையில் ஒரு ஆசீர்வாதம் வந்து கொண்டு இருக்கிறது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன், அது சரியே. அது பலவீனப்படுத்துவதாக இருக்காது. அது இனிமேலும் என்னை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இங்கே எப்பொழுதாவது சம்பவித்திருக்கிறது, அல்லது வேறு எந்த நேரத்திலும் சம்பவித்து இருக்கிற எதற்கும் அப்பால் தூரமானதாக இருக்கும். அது கர்த்தர் கொடுத்திருக்கிற ஏதோ ஓன்றாக இருக்கிறது. நான்... விரும்புகிறேன். 122. அது கிருபையில் விசுவாசமுள்ள ஒரு - ஒரு விசுவாசியாக என்னை ஆக்கினது. நான் செய்திருந்த பிறகும், நான் செய்திருந்த அந்தக் காரியங்களுக்குப் பிறகும், நான் நடந்து கொண்டிருந்த விதத்திற்குப் பிறகும், தேவனுக்கு முன்பாக இன்னுமாக கண்டிக்கப்பட்ட பிறகும், தேவன் எதையாகிலும் பேசி, ஒரு... செய்யும் போது. அவர் எப்படியும் அதைச் செய்யப் போகிறார். ஆமென். 123. மோசே ஒருமுறை ஒரு மனிதனைக் கொன்றான். ஆனால் தேவன் தீர்மானித்திருந்தார். அவர் அவனை அங்கே பின்னால் வனாந்தரத்தின் பின்பாகத்தில் 40 வருடங்களாக வைத்து இருந்தார், ஆனால் அவர் இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றார். 124. அவர் அற்புதமானவர் இல்லையா-? [சபையார், ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.) அவர் அப்போது இருந்த அதே தேவனாகவே இன்றும் இருக்கிறார். மேலும், நண்பர்களே, கிறிஸ்தவ விசுவாசிகளாகிய உங்கள் ஒவ்வொருவரிடமும் இதைக் கூறுகிறேன், நீங்கள் எந்த சபைக்குப் போகிறவர்களாக இருந்தாலும் அது பொருட்டல்ல. 125. அன்றொரு நாள், நான் வானொலி பரப்பரங்கத்தில் இருந்தபோது, அங்கே ஒரு மனிதர் இருந்தார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் மிகவும் அருமையான ஒரு மனிதர், அவருடைய மனைவியும் அவ்வாறு தான், அங்கே சகோதரன் போஸ் அவர்களும் நானும் ஒலிபரப்பிற்காக சில ஒலிப்பதிவுகளைச் செய்து கொண்டிருந்தோம். அவர் என்னுடைய கரத்தைக் குலுக்கி, பேசிக் கொண்டிருந்தார். நான் சொன்னேன்.... நல்லது, அவர் - அவர் சகோதரன் ஜோசப் அவர்களை மிகவுமாக நேசிக்கிறவர். நான், "நீர்... நீர் அவருடைய சபைக்கா போகிறீர்-?” என்று கேட்டேன். அவர், "இல்லை. நான் ஒரு மெதோடிஸ்டு” என்றார். நான், நல்லது, நீர் அதற்காக மன்னிக்கப்பட முடியும்" என்றேன். இப்படியாக நான் அந்த விதமாக அவரை விளையாட்டுத்தனமாக கிண்டல் செய்து கொண்டிருந்தேன். நான், "நான் அப்படியே உம்மிடம் வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன். 126. நான், 'இதோ பாரும், சகோதரனே, நான் வழக்கமாக கொஞ்சம் குதிரைச் சவாரி செய்வது உண்டு. என்னுடைய தகப்பனார் ஒரு குதிரை சவாரி செய்பவர். மேலே அரப்போ காட்டில், நாங்கள் அங்கு தான் கால்நடைகளை புல்மேய விடுவோம். அவர்கள்... மரபு வகையில் கலப்படமற்ற ஹியர்ஃபோர்ட் தவிர எதுவுமே அந்த மேய்ச்சல் நிலத்தில் வர முடியாதிருந்தது, முற்றிலுமாக. காட்டிலாகா அதிகாரி அந்த நீண்ட தொடர்ச்சியான வேலியில் நின்றுகொண்டு, அது பதிவுசெய்யப்பட்டு, மரபு வகையில் கலப்படமற்ற ஹியர்ஃபோர்ட்டாக இருந்தாலன்றி வேறு எதையும் அதனூடாக கடந்து செல்ல விடமாட்டான். அவர்களில் சிலர் அங்கே லேசி ஜெ (Lazy J) ஐக்கொண்டும், சிலர் பார் W -ஐக்கொண்டும், சிலர் சர்க்கிள் ஆர் (Circle R)-ஐக் கொண்டும், சிலர் ட்ரைபாட்டைக் கொண்டும் வருகிறார்கள். அவைகள் வித்தியாசமான தர அடையாளங்களில் சூடு முத்திரை போடப்பட்டிருக்கும், ஆனால் அவைகள் எல்லாமே மரபு வகையில் கலப்படமற்ற ஹியர்ஃபோர்ட்டாகவே இருக்கும்” என்றேன். அது சரியே. 127. அந்த விதமாகத்தான் அது இருக்கிறது. நாம் மெதோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, இது, அல்லது அது, அல்லது மற்றதாகவோ இருக்கலாம். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே, தூய மரபு வழி வந்த உயர்தர கிறிஸ்தவனாக இருக்கும் காலம் வரையில், அந்த ஒரே காரியம் தான் மேய்ச்சல் நிலத்திற்குள், தொழுவத்திற்குள் வர முடியும். ஏனென்றால், "ஒரே ஆவியினாலே, நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.” அப்பொழுது நாம் ஒரே ஜனமாகவும், ஒரே சபையாகவும், ஒரே யோசனையோடு, ஒரே நோக்கம் உடையவர்களாகவும் ஆகிறோம். அது நாம் இங்கே பூமியின் மேல் இருக்கையில், இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதற்காகத் தான். ஒரே பரலோகம் -! அது சரிதானா-? [சபையார், "ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.) நாமும் அதற்காக மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். 128. நான் உங்களிடம் பேசுவதற்கான என்னுடைய நேரத்தைக் கடந்து விட்டேன், ஏனென்றால் நீங்கள் சற்று நேரத்தில் திரும்பிச்செல்ல துரிதப்பட்டாக வேண்டும். ஆனால் திறந்த மனதோடு பேசுவது எத்தனை பேருக்குப் பிடிக்கிறது-? [சபையார், "ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.) நீங்கள் - நீங்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறீர்கள் என்பதாக தோன்றுகிறீர்கள். பல மணி நேரங்களாக நம்மால் பேசிக் கொண்டேயிருக்க முடியும். "மேலும் இப்பொழுது" "சகோதரன் பிரன்ஹாமே, இதை உங்களால் எனக்கு விளக்கிக்கூற முடியுமா-?” என்று கூறுவீர்களானால், என்னால் அதைச் செய்ய முடியாது. என்னால் அதைச் செய்யக் கூடும்படி விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியாது. அது இயலாத காரியம். 129. இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை உங்களால் விளக்கிச் சொல்ல முடியாது. நீங்கள் அதைச் செய்ய முயற்சிக்கும் போது, அவர் என்னிடம் கூறினதுபோல, மாம்சபிரகாரமான ஒப்பீடுகள் எழும்ப நீங்கள் காரணமாகி விடுகிறீர்கள். புரிகிறதா-? நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். அது அப்படியே உண்மையாக இருக்கிறது. அது அதைச் செய்துவிடும். அது அது கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஒரு தடங்கலாக இருக்கிறது. நான் என்ன கூற வருகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா-? அது - அது -அது குழப்பத்திற்குக் காரணமாகி விடுகிறது. 130. இப்பொழுது, செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், உங்கள் இருதயத்தில் உண்மையாக இருந்து, உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்து, தேவன் நம்மோடு கூட தொடர்ச்சியாக நடந்து வருவதற்காக நன்றி உள்ளவர்களாக இருப்பது தான், அவர் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார். 131. மேலும் நான் இதைக் கூறுகிறேன், நான் இதை முன்னுரைக்கிறேன் (predicting). இப்பொழுது, நான் இதை கர்த்தருடைய நாமத்தில் கூறிக் கொண்டிருக்கவில்லை. நான் உங்களுடைய சகோதரனாக இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் இதை முன்னுரைக்கிறேன். கூர்ந்து கவனியுங்கள். இந்த வருடத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்த வருடம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும், அல்லது இந்த வருட முதற்கொண்டு அவள் விழத் தொங்கி விடுவாள் என்று நான் முன்னுரைக்கிறேன் (predict). ஆமாம், இது அமெரிக்கா மனந்திரும்புவதற்கான நேரமாக இருக்கிறது. அது மனந்திரும்பாமல் போனால்... நான் அதை ஏறக்குறைய இந்த வருடம் ஜனவரி 15 அல்லது ஜனவரி 16ல் முன்னுரைத்தேன் என்று நினைக்கிறேன், அதை கூறும்படியாக வழி நடத்தப்படுவதை உணருகிறேன். மேலும் அது... நான் அதனோடு நிலையாக தரித்து இருக்கிறேன். 132. சக்கரங்கள் மேலே புரட்டப்படுவதை (turning up) நான் கண்டேன். பெரிய, பிரபலமான சுவிசேஷகராகிய பில்லி கிரஹாம் அவர்களைக் கவனிக்கிறேன், அவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்து, பெரிதளவில் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் அதைப் போன்ற இடங்களையும் தட்டும்படியாக, நியூயார்க் மற்றும் இந்தப் பெரிய இடங்களில், தம்முடைய கூட்டங்களை ஏற்பாடு செய்தார். நான் அதைக் காண்கிறேன், சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் வெளிநாட்டை விட்டு ரத்துசெய்து விட்டார் (excommunicated). ஜூன் மாதத்திற்குப் பிறகு, நான் ஜெர்மனிக்குள்ளும், திரும்ப தென் ஆப்பிரிக்காவிற்குள்ளும் மற்றும் அங்கே அதனூடாக போகும்படியாக திரு. ஆர்கன் பிரைட்-ம் மற்றும் அவர்களும் விரும்புகிறார்கள், ஆனால் ஏதோவொன்று என்னை அமெரிக்காவிலேயே பிடித்து வைத்திருக்கிறது. மற்ற எல்லாருமே அதேவிதமாக இருப்பதாகவே தோன்றுகிறது. 133. அமெரிக்கா இந்த வருடத்தில், தன்னுடைய கடைசி அழைப்பைப் பெற்றுக் கொள்ளப் போகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். சரி. நான் துணிவு கொண்டிருந்திருக்க மாட்டேன் (daresn't). இங்கேயிருக்கும் ஒலிநாடாக்களில் இங்கு பாருங்கள். அவர்கள் இன்றிலிருந்து 20 வருடங்கள் (கழித்தும்) ஒலிநாடாவைப் போட்டுப் பார்க்கலாம். பாருங்கள்-? நீங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனித்து பார்க்க வேண்டியிருக்கிறது, நீங்கள் என்ன கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். ஆனால் நான் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது, கர்த்தர் என்னிடம் அதைக் கூறியிருக்கவில்லை. ஆனால், இந்த வருடத்தில், அமெரிக்கா ஒன்றில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளப் போகிறது அல்லது முற்றிலுமாக அவரைப் புறக்கணிக்கப் போகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் அவரைப் புறக்கணிப்பார்கள் என்று நான் முன்னுரைக்கிறேன். நான் அவ்வண்ணமாக முன்னுரைக்கிறேன். 134. அவர்கள் புளோரிடாவில், ஜாக் கோ அவர்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் வழி எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்களால் எப்பொழுதாவது... எப்படியாக முடிந்தது-? ஒரு மனிதரை ஒரு மாகாணத்தை விட்டு துரத்துவது என்பது அரசியலமைப்பிற்கு விரோதமாகவும் கூட இருக்கிறது. நமக்கு பேச்சு சுதந்திரம் உண்டு. நிச்சயமாக, நமக்கு பேச்சு சுதந்திரம் உண்டு. ஆனால் அவர்கள்.... 135. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் இவை எல்லாவற்றையும் நிறுத்த முயற்சிப்பார்கள். வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதையும் நிறுத்த முயற்சித்து, அதைத் தடை செய்வார்கள். அதை சற்று நினைவில் கொள்ளுங்கள்: துன்புறுத்தல் எழும்பும் போது, சபையானது, அப்போது அதனுடைய மிகவும் உயர்ந்த நிலைக்கு வந்து விடுகிறது. அது எப்போதுமே சிறப்பாகவே இருக்கிறது. ஆம், ஐயா. தேவன் அவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கிரியை செய்யும்படி செய்கிறார். 136. [ஒரு சகோதரன், ஆமென். தேவனுக்கு மகிமை-! ஆமென். ஆமென். ஆமென். ஆமென். தேவனுக்கு மகிமை-!” என்று கூறுகிறார் - ஆசிரியர்.) நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு துதி உண்டாவதாக-! [தேவனுக்கு மகிமை-! தேவனுக்கு மகிமை-!] 137. [இரண்டு சகோதரிகள் ஒரே நேரத்தில் வேறு பாஷைகளில் பேசுகிறார்கள் - ஆசிரியர்.) இப்பொழுது வியாக்கியானத்திற்காக தேடி, அவர் நமக்கு என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். (இரண்டு சகோதரிகள் மறுபடியுமாக ஒரே நேரத்தில் வேறு பாஷைகளில் பேசுகிறார்கள். ஒலிநாடாவில் காலியிடம்)... மேலும் சரி. 138. இப்பொழுது இதைத் தொடர்ந்து ஒரு வியாக்கியானம் உண்டு. யாவரும் மிகவும் பயபக்தியாயிருங்கள். எப்போதாவது அது யாராக இருந்ததோ, அந்த சீமாட்டி பேசினார்கள். மிகவும் கூர்ந்து கவனியுங்கள். அதை அறிந்தவர்களை அவர்கள் விடட்டும், இப்பொழுது, பாருங்கள். ஒரு சகோதரி வேறு பாஷையில் பேசத் தொடங்குகிறார்கள் - ஆசிரியர்.) ஷ்-ஷ்-ஷ்-ஷ்-ஷ்-! [வேறொரு சகோதரி ஒரு வியாக்கியானத்தைக் கொடுக்கையில், அதே நேரத்தில் அந்த சகோதரி தொடர்ந்து வேறு பாஷையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.) 139. உங்கள் தலைகள் வணங்கியிருக்கையில், நீங்கள் அந்த வியாக்கியானத்தைக் கேட்டு உள்ளீர்கள். ஜெபத்தில் நினைவுகூரும்படியாக, இங்கே எத்தனை பேர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்-? இப்பொழுது உங்கள் கரங்களை மிக உயரமாக உயர்த்துவீர்களா-? உயரமாக, அப்பொழுது நீங்கள் யார் என்று எங்களால் காண முடியும், மேலே. உங்களுக்கு விருப்பமானால், சற்று நேரத்திற்காக, ஆர்கன் இசைக்கருவியில் கொஞ்சம் இசைத் தந்தியைப் (chord) பெற்றுக்கொள்வோம். 140. இப்பொழுது நீங்கள் உங்கள் தலையைத் தாழ்த்தியிருக்கையில், இது சத்தியம் என்று அந்த சத்தமானது சொல்லியிருக்கும் பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் எப்பொழுதாவது உள்ளே வருவீர்களானால், இப்பொழுதே வாருங்கள். 141. எங்கள் பரலோகப் பிதாவே, இப்பொழுது உம்முடைய ஆவியானவர் இந்தக் கட்டிடத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருக்கையில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை ஜெபிக்கிறோம். சத்தங்கள் புறப்பட்டுச் சென்று, இதுவே நேரமாக இருந்தது என்றும், இதுவே வேளை என்றும் கூறியிருக்கிறது. மேலும் பரலோகப் பிதாவே, மேலே உயர்த்தியிருக்கிற அந்தக் கரங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கையில், நான் ஜெபிக்கிறேன். கொஞ்சம், ஒருக்கால் 30 அல்லது அதற்கும் அதிகமான கரங்கள், கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படியாக, சற்று முன்பு மேலே உயர்த்தப்பட்டன; அவர்கள் செய்தியைக் கேட்டு, நாங்கள் கடைசி நேரத்தில் இருக்கிறோம் என்று அறிந்து கொண்டு இருக்கிறார்கள். 142. இந்த எழுப்புதல் அக்கினியானது ஒவ்வொரு குன்றிலும் இருக்கட்டும். கடைசி நாட்களில், அவர் தேவன் என்பதை நிரூபிக்கும்படியாக, இந்தக் காரியங்களை அவர் எழுப்புவார் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், மேலும் எங்கள் மத்தியில் எது சரி என்பதை செய்து, ஜனங்கள் மத்தியில், குருடர் காண்பது, செவிடர் கேட்பதாகிய, அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பித்துக் கொண்டிருக்கிறார், மகத்தான இயற்கைக்கு மேம்பட்ட ஊழியங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. மேலும் இன்று, கர்த்தாவே, நாங்கள் அதைக் காணும்படி வாழ்ந்து வருகிறோம். 143. பரலோகப் பிதாவே, நீர் இவர்களைப் பாவத்திலிருந்து இரட்சிப்பீர் என்று அவர்கள் உம்மை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினதாக சற்று முன்பு தங்கள் கரங்களை மேலே உயர்த்தின் இந்த ஏழை, அன்பு பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். இதை அருளும், கர்த்தாவே. 144. நான் ஜெபிக்கிறேன், அதோடு கூட, பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இருதயத்தையும் புதிதாக நிரப்பும்படியாக, இப்பொழுதே இந்த மகத்தான அசைவில் நாங்கள் இருக்கையில். கர்த்தாவே, இவர்களுடைய ஆத்துமாக்களில் புதிதாக அக்கினியை ஒளிரச்செய்தருளும். இதைக் கேட்ட பிறகு, இவர்கள் தாமே ஒரு வைராக்கியத்தோடு வெளியே செல்வார்களாக; அந்த வார்த்தையானது உரைக்கப்பட்ட உடனேயே, நம்முடைய அன்புக்குரிய தேசமானது அந்த உரிமைச்சலுகையை புறக்கணித்திருக்கும். 145. ஓ தேவனே, மகத்தான இராஜ்யங்கள் விழுந்துதான் ஆக வேண்டும். ஓ தேவனே, நாங்கள் இதைப் பார்க்கையில், ஒவ்வொரு சாவுக்குரிய காரியமும் என்றும் நிலைத்திருக்கும் அழிவில்லாமைக்கு வழிவிட்டாக வேண்டியிருக்கிறது. நாங்கள் அதோ அங்கே ரோமாபுரியின் பழமையான இடிபாடுகளின் மேல் நின்று, ஒரு நாளில் அந்த மகத்தான, பெரிய சக்கரவர்த்தியாயிருந்த தேசமானது உலகத்தின் செழித்து வளர்ந்த ஒரு இடமாகவும், உலகம் முழுவதிலும் மிகப் பிரகாசமான இடமாகவும் எங்கே நின்று கொண்டிருந்தது என்பதைக் காண்கிறோம். மேலும், இன்றோ, அந்த மகத்தான சாம்ராஜ்யத்தின் இடிபாடுகளைக் கண்டு பிடிக்க தரையின் கீழே இருபது அடி நீங்கள் தோண்டுகிறீர்கள். அதோ அங்கே, ஒருகாலத்தில் ஆலயம் நின்று கொண்டிருந்த இடத்தில், இஸ்லாமிய மத ஓமர் மசூதி நின்று கொண்டு இருக்கிறது. அநேக மகத்தான காரியங்கள், மகத்தான தேசங்கள், மகத்தான மகா அலெக்சாண்டர், மற்றும் கிரீசும், வேறு அநேக இடங்களும், எப்படியாக அந்த இராஜ்யங்கள் விழுந்து போயிருக்கின்றன-! 146. தேவனே, சுவிசேஷத்தைப் புறக்கணித்த காரணத்தினால், எங்கள் தேசத்தின் அஸ்திபாரம் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறதைக் காண்கிறோம். மகத்தான மனிதர்கள் இந்த தேசத்தை சுத்தம் செய்து, ஒவ்வொரு இடத்தினூடாகவும் மிகக் கவனமாகவும் முழுமையாகவும் தேடிப் பார்த்திருக்கிறார்கள், சுவிசேஷ செய்திகளானது புறப்பட்டுச் சென்றிருக்கின்றன; யோவான் ஸ்நானகனைப் போன்ற ஒரு ஆவி, அற்புதங்களைச் செய்வதோ, அல்லது அற்புதங்களைக் குறித்து எதையும் கூறுவதோ அல்ல, ஆனால் இந்த தேசத்தை திணறச் செய்திருக்கிறது. பிறகு அது யோவானுக்குச் செய்தது போன்று, அற்புதங்களை நடப்பிக்கிற இயேசுவின் வல்லமையானது அதைப் பின் தொடர்ந்தது, இன்னுமாக எங்கள் தேசமானது, விஸ்கி மதுபானங்களும், புகையிலையும், இரவு நேர கேளிக்கை விடுதிகளும், பாவமும் ஒவ்வொரு பக்கத்திலும் குவிந்து கொண்டிருக்கின்றன. எங்கள் மகத்தான நாகரிகமானது விழுந்து விழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொன்றுமே வழி விட்டு தான் ஆகவேண்டும். இந்த இராஜ்யங்கள் எல்லாமே நிச்சயமாக விழுந்தாக வேண்டும், தேவனுடைய இராஜ்யம் அதனுடைய பிரகாசத்தில் தோன்றி, மகத்தான ஆயிர வருட அரசாட்சி ஸ்தானத்திற்குள் வருகிறது. 147. ஒரு பழைய மரத்தைப் பார்க்கும் போது, ஒருகாலத்தில் அது இருந்த இடம், நான் ஒரு பையனாக உட்காருவேன்; அதனுடைய மகத்தான, இராஜ்ய கிளைகள், அந்த மரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் அங்கேயே இருக்கும் என்று நான் எப்படியாக நினைத்தேன். இன்றோ அது ஒரு முறிந்த அடிமரக் கட்டையாக இருக்கிறது, எல்லா சாவுக்குரிய காரியங்களும் நிச்சயமாக சுக்குநூறாக உடைந்து தான் ஆகவேண்டும். 148. கர்த்தாவே, நானும் கூட, ஒருகாலத்தில் வாலிபனாக இருந்தேன், இப்பொழுது நானே மரித்துக் கொண்டு, சூரியன் அஸ்தமிப்பதைக் காணும்படியாக, அதோ அங்கேயிருக்கிற அந்த வரிசையின் உச்சியைத் தாண்டி போய் சேர்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். இன்றைக்கு, அநேக நரைத்த தலைகள் இக்கட்டிடத்தில் தலைவணங்கியிருக்கின்றன, அங்கே ஒருகாலத்தில் இவர்கள் கட்டுறுதியான பலம் பொருந்தியவர்களாகவும் அழகான வாலிபர்களாகவும் இருந்தார்கள். தங்கள் முகங்களை வணங்கியிருக்கிற அநேக ஸ்திரீகள், தோல் சுருக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஒரு காலத்தில் வனப்போடு அழகாயிருந்த அவர்களுடைய முகத்திலுள்ள சுருக்கத்தின் பாதையில் கண்ணீர் பாய்கிறது. ஓ தேவனே-! "மாம்சமெல்லாம் புல்லைப் போன்றிருக்கிறது." முடிவு சமீபமாயிற்று. 149. ஓ தேவனுடைய கிறிஸ்துவே, இந்த ஏழை ஜனங்களை உம்முடைய இராஜ்யத்திற்குள் ஏற்றுக் கொள்ளும். ஏதோவொரு நாளில், நான் கட்டாயம் அதோ அங்கிருக்கிற தேவனுடைய சிங்காசனத்தண்டையில் நின்று, என்னுடைய ஊழியத்திற்கு கணக்கு ஒப்புவித்தாக வேண்டும், ஜனங்கள் மத்தியில், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிவிக்க, அதைச் செய்யும்படிக்கு நீர் அனுமதி கொடுத்திருக்கிற இந்தக் காரியங்களுக்காக நான் கணக்கு கொடுத்தாக வேண்டும். தேவனே, நான் நிச்சயமாக அதற்காக பதிலளிக்க வேண்டும். ஓ தேவனே, இன்னும் அதிக அதிகமாக என்னுடைய இருதயத்திற்குள் வைராக்கியம் (zeal) கொழுந்து விட்டு எரியச் செய்யும், ஜனங்களை கர்த்தராகிய இயேசுவிடம் எவ்வாறு வழி நடத்துவது என்பதை அறிந்துகொள்ளும் ஞானத்தைத் தாரும்). 150. இன்றும், பிதாவே, என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று உம்முடைய பரிசுத்த வார்த்தையில் நீர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். 151. இங்கே குறுக்காக அநேக கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன, கர்த்தாவே. ஏழையான, இழக்கப்பட்ட அநேக ஜனங்கள், அவர்களில் அநேகர் பின்வாங்கிப்போய், பாதையை விட்டு வெளியே இருக்கிறார்கள். தேவனே, இந்த நிமிடத்தில், இவைகள் உண்மையென்றும், நாங்கள் கடைசி நேரத்தில் இருக்கிறோம் என்றும் பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அருளும், இவர்கள் ஏதோவொரு நாளில் கடந்து போயாக வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் எங்கள் தலைகளை வணங்கி இருக்கையில், இப்பொழுதே இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்களாக. 152. முதலில் அழைத்த போது, ஒரு போதும் தங்கள் கரத்தை உயர்த்தாமல் இப்பொழுது இங்கே உள்ளே யாராவது ஒருவர் இருக்கிறீர்களா-? இப்பொழுது உங்கள் கரத்தை உயர்த்தி, "இந்நேரத்தில், நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா-? வேறு யாராவது-? ஒருபோதும்… 153. அந்த வார்த்தையானது புறப்பட்டுப் போன போது, எப்படியாக அந்த அக்கினி இந்தக் கட்டிடத்தில் விழுந்தது என்பதைக் கவனித்தீர்களா-? பார்த்தீர்களா-? நான் விசுவாசிக்கிறேன், நண்பனே. என்னுடைய வாலிப நண்பனே, உன்னுடைய கரத்தை மேலே உயர்த்தியிருக்கிற வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவனே, என்னுடைய சகோதரனுக்குக் கொடுத்தருளும். நீ கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதன் மூலமாக நீ நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறாய். பால்கனியில் எங்காவது இருக்கிறார்களா என்று வியப்படைகிறேன். 154. தேவன் இவைகளை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்பதை நாம் காண்போம் ஆனால், அவைகள் நிறைவேறுவதைக் காணும்படியாக நாம் இங்கேயிருக்கிறோம். தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தேவன் எதையாவது வாக்குத்தத்தம் பண்ணும்போது, அதைச் செய்ய தேவன் கடமைப்பட்டிருக்கிறார். 155. வேறொருவர் அங்கு உண்டா-? சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன். வேறு யாராவது தங்கள் கரத்தை உயர்த்துகிறார்களா-? சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன். வாலிப பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன். வேறு யாராவது-? சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன். 156. பால்கனியில் யாராவது இருக்கிறீர்களா-? ஒரு கிறிஸ்தவராக இல்லாமல், அதைக் கூற விரும்புகிற யாராவது ஒருவரை மேலே பால்கனியில் நான் காண விரும்புகிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மகனே, நீ அங்கே மேலே இருந்தாய் என்பதை நான் இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். அங்கே யாரோ இருக்கிறார், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் பால்கனியை நோக்கி என்னை வழிநடத்துவதாகத் தோன்றுகிறது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மத வெறியன் அல்ல. நான் அவ்வாறு இருந்தால், அப்படியிருக்க வேண்டுமென்று நான் கருதவில்லை. ஆனால் அங்கே பால்கனியில் யாரோ இருப்பது போன்று தோன்றுகிறது. மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ... உனக்கு பக்கத்தில் உன்னுடைய மனைவி இருந்தால், நீங்கள் கர்த்தராகிய இயேசுவை உங்கள் முழு இருதயத்தோடும் சேவிப்பீர்களாக. அது உங்கள் வாழ்க்கையையும், உங்கள் வீட்டையும் மாற்றுவதாக. அது மாற்றும். நீங்கள் அவருடைய ஊழியக்காரர்களாக ஆவீர்களாக. 157. இப்பொழுது, முடிப்பதற்கு சற்று முன்பாக, நான் இந்த ஆராதனையை சகோதரன் போஸ் அவர்களிடம் கொடுப்பதற்கு முன்பாக, வேறு யாராகிலும் உண்டா-? ஒரு சில நிமிடங்களில், அந்தப் பையன்கள் உள்ளே வந்து, ஜெப அட்டைகளைக் கொடுக்க தொடங்க வேண்டி இருக்கும். கட்டிடத்தில் எங்காவது, இன்னும் ஒருவர் தங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? சகோதரன் ஜோசப் அவர்கள்.... சற்று நேரம், நீங்கள் உங்கள் கரத்தை உயிர்த்துவீர்களானால்; நான் மறுபடியுமாக, உங்களோடு ஜெபிக்க விரும்புகிறேன். ஆமாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே கீழேயுள்ள உங்களை நான் காண்கிறேன். அன்புள்ள ஐயா, உமக்கு நன்றி. அங்கேயிருக்கும் வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருமையானது. 158. இப்பொழுது, எப்படியாக அந்த ஒரு வார்த்தையானது அதைப் போன்ற ஏதோவொன்றை உடைத்துப் போடும் என்றும், அக்கினி எப்படி பரவும் என்றும், உங்களில் சிலருக்கு சற்றே வினோதமாகக் காணப்படலாம். பாருங்கள்-? அது சத்தியமாக இருக்கிற காரணத்தினால் தான் அது அவ்வாறு இருக்கிறது, மேலும் நீங்கள் பாருங்கள், நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம் என்று செய்தியின் அந்த முக்கியக் கருத்து. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் உமது கரத்தைக் காண்கிறேன். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நண்பர்களே, நான் உங்களிடம் கூறுகிறேன், முத்திரை போடப்படுவதற்கு முன்பாக, தங்களுடைய விசுவாசத்திற்காக, ஒரு பயங்கரமான துன்புறுத்துதலில் நிலைத்து நிற்கும்படியாக இருக்கும் அநேகர் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என் நம்புகிறேன். 159. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரோ ஒருவர் தங்கள் கரத்தை உயர்த்துகிறீர்களா-? மிகவும் பின்னாலிருக்கும் உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஐயா, நான் உம்முடைய கரத்தைக் காண்கிறேன். வேறு யாராவது-? இப்பொழுது, வேறு யாராகிலும் மிகத் துரிதமாக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நாம் கலைந்து போகும் போது, ஜெபிக்கும் ஜெபத்திற்காக நாம் காத்துக் கொண்டிருக்கையில், நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களானால். மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே மேலேயுள்ள மனிதரே, நான் உம்முடைய கரத்தைக் காண்கிறேன். ஆமாம். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் காண்கிறேன். 160. அது அற்புதமானது; இப்பொழுது தான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தும் போது, தேவன் அதை ஜீவ புஸ்தகத்தில் எழுதுகிறார். நீங்கள் விசுவாசிக்கும் அதே நிமிடத்திலேயே, நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தும் போது, மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டு விட்டீர்கள். நீங்கள் எப்படி உங்கள் கரத்தை உயர்த்தினீர்கள்-? "என் பிதாவானவர் முதலில் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவனால் என்னிடம் வர முடியாது. அது தான் அதைச் செய்கிறது. இங்கே, தேவன் தான் இழுத்துக் கொண்டிருக்கிறார்; நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். தூதர்கள் உங்கள் பெயர்களை ஜீவ புஸ்தகத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது அதைத் தீர்த்து வைக்கிறது. நீங்கள் மாத்திரம் அப்படியே விசுவாசிப்பீர்களானால், இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள். இப்பொழுது, மறுபடியுமாக, நம்முடைய தலைகளைத் தாழ்த்திக் கொண்டிருக்கையில். 161. எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பும். பிதாவே, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிற மகத்தான பெருங்கூட்டமான இந்த ஜனங்களுக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். கர்த்தாவே, இன்று நீர் எங்களுக்காக செய்துள்ள காரியங்களைச் செய்யும் படியாக, உம்முடைய செய்தியை திரும்ப சரி என நிரூபிப்பதற்காகவும், அதைக் கொடுப்பதற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த ஜனங்கள் தங்களுடைய ஜீவனுள்ள நாட்களெல்லாம் சந்தோஷமாய் இருப்பார்களாக. நீர் சற்று முன்பு, இவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறீர், ஏனென்றால் இவர்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்திருக்கிறார்கள். மேலும், பிதாவே, இங்கே மேலே வரும்படியாகவும், பீடத்தை அல்லது இந்த பிரகாரத்தைச் சுற்றிலும் தனிப்பட்ட முறையில் நின்று உம்மிடம் ஜெபிக்கவும், இவர்களுடைய இரட்சிப்பிற்காக நன்றி கூறும்படியாகவும் சற்று நேரத்தில், அந்தப் பீட அழைப்பை விடுக்கும்போது, உயர்த்தப்பட்டிருக்கிற ஒவ்வொரு கரமும் எங்கோவுள்ள பிரகாரத்தில் நின்று, உம்மிடம் ஜெபித்து, இவர்களை உள்ளே ஏற்றுக் கொண்டதற்காகவும், அல்லது, உம்முடைய இராஜ்யத்திற்குள் இவர்களை ஏற்றுக் கொண்டதற்காகவும் நன்றிகளை கூறவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இதை அருளும், கர்த்தாவே. உம்முடைய நித்திய ஆசீர்வாதங்கள் தாமே இவர்கள் மேல் தங்கியிருப்பதாக. நம்முடைய தலையைத் தாழ்த்தியிருக்கையில், சகோதரன் ஜோசப் அவர்கள் தொடர்ந்து ஜெபத்தை நடத்துவார். *******